சீனாவின் அடி மடியிலேயே கை வைத்த இந்தியா! இனி நம்ம கிட்ட வால் ஆட்டுனா நடக்கறதே வேற!
ஐசி இன்ஜின் வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள், ரோபோக்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு, அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் (Rare Earth Minerals And Magnets) மிகவும் அவசியம். ஆனால் சீனாவில்தான் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் உற்பத்தி அதிகமாக நடைபெறுகிறது.
எனவே அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்தால், உலகின் ஆட்டோமொபைல் துறை ஸ்தம்பித்து விடும். இதை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு சீனா செய்து காட்டியது. அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்த காரணத்தால், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும், வாகனங்களின் உற்பத்தி குறைந்தது.

இதையடுத்து அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் இல்லாமல், வாகனங்களை உற்பத்தி செய்வது எப்படி? என்ற மாற்று வழிகளை, உலகின் பல்வேறு வாகன நிறுவனங்களும் ஆராய தொடங்கின. இதில், இந்தியாவை சேர்ந்த ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் இல்லாத எலெக்ட்ரிக் மோட்டாரை (Electric Motor) ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது உருவாக்கியுள்ளது. இது ஃபெர்ரைட் (Ferrite) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் ஆகும். ஃபெர்ரைட் என்பதும் கூட ஒரு வகையான காந்தம்தான்.

ஆனால் அயர்ன் ஆக்ஸைடில் (Iron Oxide) இருந்து, ஃபெர்ரைட் உருவாக்கப்படுகிறது. மற்ற அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களை போல், ஃபெர்ரைட் கிடைப்பதில் பெரிதாக தட்டுப்பாடு ஏற்படாது. எனவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த முயற்சி, தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஃபெர்ரைட் அடிப்படையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கியுள்ள எலெக்ட்ரிக் மோட்டாருக்கு தற்போது அரசின் சான்று கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த சான்றை பெற்ற இந்தியாவின் முதல் டூவீலர் நிறுவனம் என்ற பெருமையையும் ஓலா எலெக்ட்ரிக் சொந்தமாக்கியுள்ளது. ஃபெர்ரைட் அடிப்படையிலான எலெக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
முதலில் விநியோக சங்கிலியில் பாதிப்புகள் ஏற்படாது. அதாவது சீனா அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தாலும், இந்தியாவில் வாகனங்களின் உற்பத்தியில் பாதிப்புகள் நிகழாது. அத்துடன் ஃபெர்ரைட் அடிப்படையிலான எலெக்ட்ரிக் மோட்டார்கள் விலை குறைந்தவை ஆகும். இருப்பினும் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் மூலம் தயாரிக்கப்படும் வழக்கமான எலெக்ட்ரிக் மோட்டார்கள் உருவாக்கும் அதே பவர் அவுட்புட், ஃபெர்ரைட் அடிப்படையிலான எலெக்ட்ரிக் மோட்டார்களிலும் உருவாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டால், நமக்கு அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இது வாகனங்களின் உற்பத்தியை குறைப்பதுடன், வாகனங்களின் விலை அதிகரிக்கவும் காரணமாகி விடும். ஆனால் ஃபெர்ரைட் அடிப்படையிலான எலெக்ட்ரிக் மோட்டார்கள் இது போன்ற சிக்கல்களை எல்லாம் குறைத்துள்ளன.
சில சமயங்களில் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் உயர தொடங்கி விடும். இது வாகனங்களின் விலையில்தான் எதிரொலிக்கும். ஆனால் ஃபெர்ரைட் அடிப்படையிலான எலெக்ட்ரிக் மோட்டார்களை பயன்படுத்துவதன் மூலம், வாகனங்களின் உற்பத்தி செலவை குறைத்து, அவற்றின் விலையையும் கட்டுக்குள் வைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








