ஈ அடிக்க கூடாது.. ஆஃபரை வாரி வழங்கும் ஓலா.. லாபமே வேணாம்னு நினைச்சுட்டாங்களா! முடிஞ்சா இன்னைக்கே வாங்கிடுங்க!!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் சமீப சில காலமாக விற்பனைச் சரிவைச் சந்தித்து வருகின்றது. முன்பு விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாக இருந்து வந்த ஓலா எலெக்ட்ரிக் 2025 பிப்ரவரி மாத விற்பனையில் நான்காம் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டு இருக்கின்றது. மேலும், முதல் இடத்தில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)வும், இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் (TVS Motors)-ம், மூன்றாவது இடத்தில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனமும் உள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக ஓலா எலெக்ட்ரிக் உள்ளது.

இது அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டு மாபெரும் சரிவாகும். இந்த நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது மாபெரும் தள்ளுபடி சலுகையை அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ்1 சீரிஸ்-இன் கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து வேரியண்டுகளுக்கும் தற்போது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Ola electric holi sale

26,750 தொடங்கி ரூ. 22,000 வரையே தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த தள்ளுபடி சலுகை ஹோலி பண்டிகையை முன்னிட்டே அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. எஸ்1 ஏர் மாடலிலேயே ரூ. 26,750 விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், 22 ஆயிரம் ரூபாய் விலை குறைப்பானது எஸ்1 எக்ஸ் பிளஸ் மாடலுக்கே செய்யப்பட்டு இருக்கின்றது.

மற்ற எஸ்1 வரிசையில் உள்ள மாடல்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் முன்பைவிட இப்போது எஸ்1 வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் இ-ஸ்கூட்டர்கள் மேலும் மலிவு விலைக் கொண்டதாக மாறி இருக்கின்றன. குறிப்பாக, எஸ்1 ஏர் மாடலின் விலை ரூ. 89,999 ஆகவும், ஜென்2 எஸ்1 எக்ஸ் பிளஸ் மாடலின் விலை ரூ. 82,999 ஆகவும் குறைந்திருக்கின்றது.

Ola electric s1 model

மிக முக்கியமாக விலை குறைப்பின் காரணமாக ஓலா எலெக்ட்ரிக் இ-ஸ்கூட்டர் தற்போது ரூ. 64,999க்கே விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. மேலும், அதிகபட்ச விலையே ரூ. 1.60 லட்சமாக உள்ளது. விலை தள்ளுபடி மட்டுமல்ல கூடுதலாக சப்ஸ்கிரிப்ஷன் பிளானையும் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அறிவித்து இருக்கின்றது.

ரூ. 2,999 மதிப்புள்ள மூவ் ஓஎஸ் பிளஸ்-இன் பலன்களையே அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், ரூ. 7,499 மதிப்புள்ள கூட்டப்பட்ட வாரண்டி பிளானையும் அவர்கள் வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இந்த சலுகை நிறுவனத்தின் விற்பனை மிகப் பெரிய அளவில் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Take a Poll

குறிப்பாக, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஜென்2 வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஸ்டாக்குகளை ஹோலி சலுகை மிகப் பெரிய அளவில் காலி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இன்று நேற்று அல்ல கடந்த சில மாதங்களாகவே விற்பனைச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், சென்ற பிப்ரவரி மாதத்தில் அது சந்தித்து இருப்பது மாபெரும் விற்பனைச் சரிவு ஆகும். 20 ஆயிரம், 30 ஆயிரம் யூனிட்டுகள் என விற்பனையாகிக் கொண்டிருந்த எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் போன பிப்ரவரி மாதத்தில் 10 ஆயிரத்திற்கும் குறைவான யூனிட்டுகளே விற்பனையாகி இருக்கின்றன.

8,647 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இது 74.5 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஆகும். ஓலா எலெக்ட்ரிக் அறிவித்திருக்கும் சலுகை சில நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இன்று (மார்ச் 13) தொடங்கி வருகின்ற 17 ஆம் தேதி வரை மட்டுமே அது கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் பலர் இந்த சலுகையைக் கட்டாயம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், பிப்ரவரி மாத இறுதியை மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியுடன் ஓலா எலெக்ட்ரிக் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஓலா எலெக்ட்ரிக்-இன் இந்த அறிவிப்பு 'லாபமே வேணாம்னு அவங்க நினைச்சுட்டாங்களோ' என நம்மை நினைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

FAQs
விற்பனை சரிவிற்கான காரணம் என்ன?

ஓலா எலெக்ட்ரிக் விற்பனைச் சரிவைக் காண்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த காலங்களில் அதன் தயாரிப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் டெலிவரி கொடுக்கப்பட்டதே மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதுமட்டுமல்ல ரேஞ்ச் தருவது மற்றும் உற்பத்தி கோளாறுகளும் ஓலாவின் சில வாகனங்களில் காணப்பட்டு இருக்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக்-இன் இந்த ஆஃபர் எதற்காக?

ஹோலி பண்டிகையில் பலர் புதிய வாகனங்களை விரும்புவார்கள். அவ்வாறு புதிய வாகனத்திற்கு அப்கிரேட் ஆக விரும்புவோர்களைக் கவர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

ஜென் 2 மற்றும் ஜென் 3 ஆகியவற்றிற்கு ஆஃபர் வழங்கப்பட்டு இருக்கின்றதா?

ஆம், இரண்டிற்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டி இருக்கின்றது. ஜென்2-வில் எஸ்1 எக்ஸ் பிளஸ் 4kWh-க்கும், எஸ் ஏர் மாடலுக்கும் ஆஃபர் கிடைக்கும்.

ஜென்3-இல் எஸ்1 எக்ஸ், எஸ்1 ப்ரோ, எஸ்1 ப்ரோ பிளஸ் ஆகிய அனைத்திற்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Thursday, March 13, 2025, 20:19 [IST]
English summary
Ola electrics holi flash sale offers discounts up to rs 26750 on s1 scooters
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+