சீனாவின் கொட்டத்தை மொத்தமாக அடக்கிய ஓலா! போட்ட ஆட்டத்திற்கு விழுந்த சம்மட்டி அடி!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக, ரேர் எர்த்மேகன்ட்இல்லாமல் தயாரித்த ஃபெரைட் மோட்டாருக்கு அரசு அங்கீகாரத்தை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் சீனாவின் ஆதிக்கம் இந்திய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் குறையும் என்றும், இந்தியா எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தற்சார்பை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார்களில் பொருத்தப்பட்டுள்ளது மேக்னட்கள் ரேர் எர்த் மேக்னட்களாக வழங்கப்பட்டுள்ளன. இந்த மேக்னட்களுக்கான மூலப்பொருட்கள் சீனாவில் தயாராகும் ரேர் எர்த் என்ற விஷயத்தை அடிப்படையாக கொண்டது.இதனால் இந்த மோட்டாரை தயாரிக்க வேண்டும் என்றால் சீனாவில் இருந்து தான் இந்த மேக்னட்டைட இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் ஓலா நிறுவனம் சொந்தமாக ஃபெரைட் என்ற மோட்டாரை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டாரை அந்நிறவனம் சொந்தமாக உருவாக்கியுள்ளது. இந்த மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள மேக்னட்டில் ரேர் எர்த்என்ற மூலப்பொருள் தேவையில்லை. இதனால் இந்த மோட்டாரை முற்றிலும் சீனாவின் ஆதிக்கம் இல்லாமல் தயாரிக்க முடியும் என அந்நிறவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள குளோபல் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் சென்டரில் இந்த மோட்டாரை சோதனை செய்தது. இந்த மோட்டார் அங்கு சிறப்பான ஃபெர்பார்மென்ஸ் செய்வதாக சான்றிதழிக்கப்பட்டுள்ளது. இது போக AIS 041 பவர் டெஸ்டைட செய்தது. மத்திய சாலை போக்குவரத்து துறையின் வழிகாட்டுதலின்படி இந்த சோதனை செய்யப்பட்டது.

இதன்படி இந்நிறுவனம் தயாரித்த 7kW மற்றும் 11 kW ஆகிய வேரியன்ட் மோட்டார்கள் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையில் அதன் செயல்பாடு, நம்பதன்மை எல்லாம் சோதனை செய்யப்பட்டது. ரேர் எர்த் மேக்னட் கொண்டு உருவாக்கப்பட்ட மோட்டார் எப்படி செயல்படுமோ அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இந்த மோட்டார் செயல்பட்டுள்ளது.
இந்த மோட்டாரை தயாரிக்க ரேர் எர்த் கொண்ட மோட்டாரை தயாரிப்பதை விட செலவு வெகுவாக குறையும். மேலும் ரேர் எர்த் மேக்னட்டிற்காக சீனா போன்ற நாடுகளை சார்ந்திருப்பது குறையும். இந்நிலையில் இந்த சோதனையில் இந்த மோட்டாருக்கான அரசு சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில் இதை ஓலா நிறுவனம் தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்த துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓலா நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சங்கல்ப் 2025 நிகழ்ச்சியில் இந்த ஃபெரைட் மோட்டாரை அறிமுகப்படுத்தியிருந்தது. இனி இந்தமோட்டார் தான் ஓலா வாகனங்களில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம். அப்படி பொரத்தப்ப்டடால் வானகத்தின் திறன் மாறுபடும். ரேஞ்ச், ஃபெர்பார்மென்ஸ், நீடித்த உழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் மாறுபடலாம். இது நிச்சயம் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனா ரேர் எர்த் மேக்னட் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது. இதனால் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் வாகன தயாரிப்பில் பாதிக்கப்பட்டன. சில நிறுவனங்கள் இருப்பு ஸ்டாக்கை வைத்து தயாரிப்பை தொடர்ந்தன. மாற்று வழியை யோசிக்க துவங்கினர். இதில் பஜாஜ் நிறுவனம் ஒரு மாத தயாரிப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.இது விற்பனையை நேரடியாக பாதிக்கும் வகையில் இருந்தது. தற்போது தான் அந்நிறுவனம் மீண்டு வந்துள்ளது. இது போன்ற பிரச்சனை பின்னர் எழாமல் இருக்க தற்சார்பு தேவை இருக்கிறது. இதை ஓலா நிறுவனம் எட்டி பிடித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேர் எர்த் மேக்னட்டை ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்த நிலையில் இதில் இந்தியா பெரும்பாதிப்பிற்குள்ளானது. இந்நிலையில் எதிர்காலத்தில்இது போன்ற பிரச்சனை வந்தால் நிச்சயம் இந்தியா பாதிக்கப்படும். இந்நிலையில் ஓலா நிறுவனம் சீனாவை சாராத வகையில் மேக்னட்டை தயாரித்து சாதனை படைத்துள்ளது என்றே சொல்லலாம். இவி வாகன துறையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருவது தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









