எலக்ட்ரிக் பைக்கை எப்படி உருவாக்கனும்னு ஓலா கிட்ட கேட்டு கத்துக்கணும்! ரூ.1 லட்சத்தில் எலக்ட்ரிக் பைக்...
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'ரோட்ஸ்டர்' (Roadster) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் (Electric Bike) விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதுவரையில் எஸ்1 (S1) என்கிற பெயரிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் ஓலா எலக்ட்ரிக் களமிறக்கப்படுகிறது.
ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் பணிகள் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஷோரூம்களுக்கு ரோட்ஸ்டர் பைக்குகளை அனுப்பி வைக்கும் பணிகளை கூட ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் துவங்கிவிட்டது. இந்த நிலையில், ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக் தொடர்பான படம் ஒன்றை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த படத்தில், ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி பேக் ஹைலைட்டாக காட்டப்பட்டு உள்ளது. ரோட்ஸ்டர் பைக்கின் பேட்டரி பேக் ஆனது எளிமையான வடிவத்தில், அளவில் சிறியதாக உள்ளது. இதைவிட முக்கியம் என்னவென்றால், பைக்கில் பேட்டரி எங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பதை நிறைய பேரால் கண்டுப்பிடிக்க முடியாது.
ஏனெனில், அந்த அளவிற்கு பேட்டரி பைக் ஆனது பைக்கின் உடலமைப்பில் மறைவான இடத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதை ஹைலைட்டாக சுட்டிக்காட்டியே பாவிஷ் அகர்வால் தனது எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், "புரட்சியின் வடிவம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 4680 செல்களை கொண்டு இந்த பேட்டரி பேக்கை புதியதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இது, செயல்திறன்மிக்கதாக இருப்பதுடன், குறுகிய இடத்திற்குள் அதிக ஆற்றலை சேமித்து வைக்கக்கூடியதாகவும் உள்ளது. மேலும், பேட்டரிகள் பாதுகாப்பானவை ஆக இருப்பது மட்டுமின்றி, இவற்றை குறைந்த செலவில் தயாரிக்க முடிவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவிக்கிறது. இருப்பினும், அதேநேரம் வழக்கமான லித்தியம்-இரும்பு பேட்டரிகளை போன்று அதிக ஆற்றலை சேமித்து வைக்கக்கூடிய அடர்த்தியை கொண்டவைகளாக உள்ளன.
ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக் ஆனது 2.5kWh, 3.5kWh மற்றும் 4.5kWh என 3 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் அளவில் பெரியதான 4.5kWh பேட்டரி உடன் விற்பனை செய்யப்படும் ரோட்ஸ்டர் பைக்கின் விலையே வெறும் ரூ.1 லட்சம் என்கிற அளவில்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கில் சிறப்பு வாய்ந்த பேட்டரி பேக் உடன் செயின் டிரைவ் சிஸ்டம் மற்றும் அதிநவீன மோட்டார் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ரோட்ஸ்டரில் வழங்கப்பட உள்ள மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், தட்டையான வயர் கேபிள்கள் ஆகும். இது பைக்கின் எடையை குறைக்கக்கூடியதாக உள்ளது. மேலும், பைக்கை கட்டுக்கோப்பான வடிவத்தில் உருவாக்கவும் தட்டையான கேபிள்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறான தட்டையான கேபிள்களை எலக்ட்ரிக் பைக் ஒன்றில் வழங்கும் முயற்சியை முதல்முறையாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இவை மட்டுமில்லாமல், ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கில் இன்னும் ஏகப்பட்ட வசதிகள் இடம்பெற்று உள்ளன. பிரேக்-பை-வயர் டெக்னாலஜி, சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், மூவ் ஓ.எஸ் 5, க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோட் மற்றும் அதிநவீன ரீஜெனரேஷன் டெக்னாலஜி அவற்றுள் சில ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்கான ரோட்ஸ்டரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட உள்ள பேட்டரியின் அசத்தலான வடிவம் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளதால், இது ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கை மேலும் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








