ஆரம்பத்தில் ஸ்பிளெண்டர் பைக்குக்கு கூட இப்படித்தான் வரவேற்பு கிடைச்சுது... ஓலாவின் முதல் நம்பிக்கையான பைக்

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம். முதன்முதலாக 2021ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், தற்போதுவரையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் ஓலா நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கை 'ரோட்ஸ்டர்' (Roadster) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. விற்பனையில் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு போட்டியாக சில எலக்ட்ரிக் பைக்குகள் மார்க்கெட்டில் உள்ளன.

ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது புதிய ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கிற்கும், ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்ற்மைகளை பற்றி ஆகும். ஹீரோ ஸ்பிளெண்டர் ஆனது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் நம்பர் ஒன் பைக் ஆக விளங்குகிறது.

ola roadster vs hero splendor

பவர்டிரெயின்: புதிய ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கில் 2.5kWh, 3.5kWh, 4.5kWh மற்றும் 9.1kWh என 4 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 7 கிலோவாட்ஸ் மற்றும் 11 கிலோவாட்ஸ் என 2 விதமான திறன்களில் வழங்கப்பட்டுள்ளது.

மறுப்பக்கம், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் 94.2 சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7.91 பிஎச்பி மற்றும் 8.05 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கில் எந்த அளவிற்கு டார்க் திறனை அதிகப்பட்சமாக பெறலாம் என்பது குறித்த விபரங்கள் இல்லை.

மைலேஜ்/ ரேஞ்ச்: ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கில் 252கிமீ-இல் இருந்து 501கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக இத்தனை கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ஓலா தெரிவிக்கிறது. ஆனால், நிஜ வாழ்க்கையில் இதனை காட்டிலும் சற்று குறைவான ரேஞ்சையே பெற முடியும். ஸ்பிளெண்டர் பைக்கின் ரேஞ்ச் ஆனது லிட்டருக்கு 60கிமீ ஆகும்.

சஸ்பென்ஷன்: ரோட்ஸ்டர் பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. அதுவே, ஹீரோ ஸ்பிளெண்டரில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன.

விலை: எக்ஸ் மற்றும் எக்ஸ்+ என 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஓலா ரோட்ஸ்டர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.74,999-இல் இருந்து ரூ.1,54,999 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே, ஸ்பிளெண்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.74,931இல் இருந்து ரூ.76,449 வரையில் தற்சமயம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸ்பிளெண்டருக்கு போட்டியாக ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கை இப்போதே கருதுவது கொஞ்சம் டூ மச் ஆகும். இருப்பினும், எதிர்காலத்தில் இப்போது ஸ்பிளெண்டர் பிடித்திருக்கும் முதலிடத்தை ரோட்ஸ்டர் பிடிப்பதற்கு வாய்ப்புள்ளது. இதற்கேற்ப பல்வேறு விதமான ரோட்ஸ்டர் பைக்குகளை அடுத்தடுத்ததாக களமிறக்க ஓலா திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 20:12 [IST]
English summary
Ola roadster electric bike vs hero splendor check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+