சொன்னதை செய்து காட்டிய ஓலா... எதிர்பார்த்ததை விட பைக்கின் விலை குறைவு! அதிக விலையிலும் அறிமுகம்

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 'ரோட்ஸ்டர்' (Roadster) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முதல் ஓலா எலக்ட்ரிக் பைக் மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் (X) மற்றும் எக்ஸ்+ (X Plus) என்பன அவை ஆகும். இவை இரண்டிற்கும் இடையேயான வித்தியாசங்கள் என்ன? நமது தேவைக்கு ஏற்ப எதை வாங்குவது? என்பதை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

பேட்டரி & ரேஞ்ச்: ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கை 2.5kWh அல்லது 3.5kWh அல்லது 4.5kWh பேட்டரி உடன் வாங்கலாம். மறுப்பக்கம், ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கை 4.5kWh மற்றும் 9.1kWh பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்ய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பேட்டரியை பொறுத்து அதன் மூலம் சிங்கிள்-சார்ஜில் பைக் இயங்கும் தூரம் வேறுப்படும்.

ola roadster x and x

9.1kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 100%-0 சார்ஜில் அதிகப்பட்சமாக 501கிமீ தொலைவிற்கும், 4.5kWh பேட்டரியில் 252கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என ஓலா தெரிவித்துள்ளது. நிஜ உலகில் இந்த பேட்டரிகளில் இருந்து முறையே 400கிமீ மற்றும் 200கிமீ அளவிலான ரேஞ்சை பெறலாம்.

மற்ற இரு சிறிய அளவிலான பேட்டரிகளில் இருந்து எந்த அளவிற்கான ரேஞ்சை பெறலாம் என்கிற விபரம் இல்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், 2.5kWh பேட்டரியில் அதிகப்பட்சமாக 115கிமீ வரையிலும், 3.5kWh பேட்டரியில் 160கிமீ வரையிலும் சார்ஜ் ரேஞ்சை பெறலாம். ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கில் 7 கிலோவாட்ஸ் மோட்டாரும், எக்ஸ்+ பைக்கில் 11 கிலோவாட்ஸ் மோட்டாரும் பொருத்தப்படுகிறது.

ola roadster x and x

விலைகள்: ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 2.5kWh பேட்டரி உடன் ரூ.74,999 ஆகவும், 2.5kWh பேட்டரி உடன் ரூ.84,999 ஆகவும், 2.5kWh பேட்டரி உடன் ரூ.94,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 4.5kWh பேட்டரி உடன் ரூ.1,04,999 ஆகவும், 9.1kWh பேட்டரி உடன் ரூ.1,54,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரேக்: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-Channel ABS)-ஐ வழங்கவில்லை. அதற்கு பதிலாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐ தான் வழங்கியுள்ளது. ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் மட்டும் கூடுதலாக முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்குகளை பெறலாம். எக்ஸ் பைக்கில் முன் சக்கரத்திலும் டிரம் பிரேக் தான் கிடைக்கும்.

ola roadster x and x

செயல்திறன்: ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை 3.1 வினாடிகளிலேயே எட்டிவிட முடியும். இந்த பைக்கின் டாப்-ஸ்பீடு 118kmph ஆகும். மறுப்பக்கம், எக்ஸ்+ பைக்கில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை சற்று விரைவாக 2.7 வினாடிகளிலேயே எட்டிவிட முடியும். இந்த பைக்கின் அதிகப்பட்ச வேகத்தை தற்போதைக்கு ஓலா நிறுவனம் அறிவிக்கவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கின் இந்த இரு வேரியண்ட்கள் எப்படிப்பட்டவை என்பதை ஓட்டி பார்த்தால்தான் தெரியவரும். நாங்கள் விரைவில் இந்த எலக்ட்ரிக் பைக்குகளை ஓட்டி பார்த்து விமர்சனங்களை வழங்குவோம். எங்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கவும். பொது மக்களுக்கு எக்ஸ் பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் அடுத்த மார்ச் மாத மத்தியில் துவங்கலாம். ஆனால், 9.1kWh பேட்டரியை கொண்ட எக்ஸ் பிளஸ் பைக்கின் டெலிவிரிகள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகே துவங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த தொகுப்பில் நாங்கள் பதிவிட்டுள்ளவை ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கின் படங்கள் மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 15:59 [IST]
English summary
Ola roadster x and x plus electric bikes comparison
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X