ஷோரூமுக்கு குடும்ப குடும்பமா வராங்க! பைக்கை அப்புறம் டெலிவிரி எடுத்துக்கலாம்... இந்த ஜாலியை மிஸ் பண்றாதீங்க!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் பைக் (Electric Bike) ஆக 'ரோட்ஸ்டர் எக்ஸ்' (Roadster X) கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே முன்பதிவுகள் துவங்கப்பட்டு விட்டாலும், சாலையில் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகளை காண கிட்டத்தட்ட 3 மாதங்களாகி உள்ளது. ஏனெனில், கடந்த மே 23ஆம் தேதியில் இருந்துதான், ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரிகள் கொடுக்க ஆரம்பித்தனர். ஏப்ரல் மாதத்தில் இருந்தே டெலிவிரிகள் துவங்கப்பட்டுவிடும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், பைக்கின் உற்பத்தி பணிகளின் தாமதத்தினால் மே மாதத்தில் துவங்கப்பட்டுள்ளது.
அறிமுகத்தை தொடர்ந்து, மே 25ஆம் தேதியில் இருந்து ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளை விருப்பப்படுவோர் ஓலா ஷோரூம்களில் டெஸ்ட் ரைடு (Test Ride) செய்து பார்க்கலாம் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளை டெஸ்ட் ரைடு கொடுக்கும் பணிகள் ஓலா டீலர்ஷிப் ஷோரூம்களில் துவங்கப்பட்டு உள்ளன.

இதனாலேயே, ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை மக்கள் டெஸ்ட் ரைடு செய்து பார்க்கும் வீடியோக்களையும், படங்களையும் கடந்த சில தினங்களாக இணையத்தில் பார்க்க முடிகிறது. இதில் ஒரு வீடியோவில், நெடுஞ்சாலையில் ஓட்டிப் பார்க்கப்படும் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கில் சிவப்பு நிற நம்பர் பிளேட் (Number Plate) உள்ளதை காணலாம்.
மேற்கு வங்காளத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மாலை நேரத்தில் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் டெஸ்ட் ரைடு செய்யப்படுவதைவும், 100km/h வேகத்திற்கு மேல் ஓட்டி சோதனை செய்யப்படுவதையும் பார்க்க முடிகிறது. இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்களில், கஸ்டமர்களால் வேகமாக ஓட்டப்படும் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகளின் திறனை பார்க்க முடிகிறது. சிலர், பின்னால் ஒருவரை அமர வைத்துக் கொண்டும் டெஸ்ட் ரைடு செய்து பார்த்துள்ளனர்.

ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை எக்ஸ் மற்றும் எக்ஸ்+ என இரு விதமான வெர்சன்களில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்து உள்ளது. இவை இரண்டையும் சாலையில் ஓட்டி பார்த்து டெஸ்ட் ரைடு செய்யலாம். எக்ஸ் பைக்கை காட்டிலும் எக்ஸ்+ ஆனது செயல்திறன்மிக்கது ஆகும். இதில் அளவில் பெரியதான 4.5kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது.
0-இல் இருந்து 40km/h வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 118km/h ஆகும். இந்த பைக்கின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 252கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 4.5kWh திறன் கொண்ட பேட்டரி மட்டுமில்லாமல், பெரிய அளவிலான 9.1kWh பேட்டரி உடனும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்படுகிறது.
4.5kWh பேட்டரி உடன் இந்த எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.29 லட்சத்தில் இருந்தும், 9.1kWh திறன் கொண்ட பேட்டரி உடன் ரூ.1.99 லட்சமாகவும் உள்ளன. அதேநேரம், ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் ஆனது 2.5kWh, 3.5kWh மற்றும் 4.5kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிமுகத்தின் போது ரூ.89,999இல் இருந்து ரூ.1,09,999 வரையில் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.99,999இல் இருந்து ரூ.1,24,999 வரையில் அதிகரித்துள்ளது. ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை ஆரம்பத்திலேயே முன்பதிவு செய்தவர்களுக்கு விலையில் மட்டுமின்றி, கூடுதலாக ரூ.10,000 மதிப்பிலான சலுகைகளும் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்கனவே ஓலா நிறுத்திவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கான அறிமுக சலுகை ஆனது முதல் 5,000 கஸ்டமர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த ஓலா எலக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்தவர்களும் இந்த பைக்கை டெஸ்ட் ரைடு செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் மூலமாக, ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் எல்இடி ஹெட்லைட் எந்த அளவிற்கு ஒளிர்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications