நாளை மறுநாள் அறிமுகமாகிறது ஓலா இ-பைக்.. ஸ்பிளெண்டரை போல கம்மி விலையிலா!! மணிக்கு 124 கிமீ வேகத்துல போகும்..
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மாடலை நாளை மறுநாள் (பிப்ரவரி 5) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரோட்ஸ்டர் (Roadster) எனும் பைக் மாடல்களை நாட்டில் வெளியீடு செய்திருந்தது. இது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறியிருந்தது. ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகிய வேரியண்டுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.
இதில் முதல் ஒன்று ரூ. 74,999 என்கிற மிகவும் குறைவான விலையில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலை தேர்விற்கான எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலை குறைவான இ-பைக்கையே நாளை மறுநாள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஓலா விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விலை குறைவானதாக இந்த எலெக்ட்ரிக் பைக் இருந்தாலும் அதிகம் மைலேஜ் தரும் வகையிலேயே அதனை ஓலா தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில் ஓர் முழு சார்ஜில் இந்த பைக்கை 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்ற வகையிலேயே அது தயார் செய்துள்ளது.
அதுமட்டுமல்ல இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 124கிமீ ஆகும். இந்த திறனுக்காக 11 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இதன் அதிக ரேஞ்ச் திறனுக்காக 2.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த ஒரு பேட்டரி பேக் தேர்வு மட்டுமில்லைங்க, இன்னும் பல பெரிய பேட்டரி பேக் தேர்வுகள் இந்த பைக் மாடலில் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், இந்த பைக் இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தனித்துவமான தோற்றம், தனித்துவமான சிறப்பம்சங்களையும் இதற்கேற்ப ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் தாங்கியிருக்கின்றது. ஓலாவின் மூவ்ஓஸ் 5 அம்சம் கொண்ட 4.3 அங்குல எல்சிடி திரை, ஏபிஎஸ் சிஸ்டம், முன் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் திறைகள் பலதரப்பட்ட திறன்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, செல்போன் இணைப்பு உள்ளிட்ட திறன்களையே அதுக் கொண்டிருக்கும். இதுமட்டுமல்ல எல்இடி லைட், ரீஜென் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஜியோ ஃபென்சிங் போன்ற அம்சங்களையும் இந்த பைக்கில் காண முடியும்.
மூன்று விதமான ரைடிங் மோட்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை விலை குறைவான ரோட்ஸ்டர் எக்ஸ் இ-பைக் தேர்வில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய பைக்கே சீக்கிரமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆனால், இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் திரையில் டச் ஸ்கிரீன் வசதி இருக்காது. இந்த வசதி உயர்நிலை தேர்வுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கும். அவை அடுத்தடுத்து வரும் மாதங்களில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளன.


Click it and Unblock the Notifications








