முதல் எலக்ட்ரிக் பைக்கையே தாறுமாறா கொடுக்கும் ஓலா! முதலில் புக் செய்தவர்களுக்கு செம்ம லக்கு!!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் பைக் (Electric Bike) அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவரையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) மட்டும் விற்பனை செய்துவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், நீண்ட வருட ஆலோசனைகளுக்கு பிறகு முதல்முறையாக எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனையில் இறங்குகிறது. 'ரோட்ஸ்டர் எக்ஸ்' (Roadster X) என்கிற பெயரில் கொண்டுவரப்படும் முதல் ஓலா எலக்ட்ரிக் பைக் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பைக்கை முன்பதிவு செய்தவர்களில் கூட நிறைய பேர் இன்னும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை நேரில் பார்தது இல்லை.
கடந்த 2025 பிப்ரவரி 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகள் அப்போதே துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, பைக்கை புக் செய்தவர்களுக்கு டெஸ்ட் ரைடு (Test Ride) செய்துப் பார்க்க பிப்ரவரி இறுதியில் இருந்து பைக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகள் ஓலா டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடையாததால், பைக்கின் டெஸ்ட் ரைடு மார்ச் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மார்ச் மாதத்திலும் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கின் டெஸ்ட் ரைடுகள் துவங்கப்படவில்லை. ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் மே மாதத்திற்கு தாமதப்படுத்தப்பட்டது. இந்த மே மாதத்தின் முதல் வாரத்திலேயே இந்த எலக்ட்ரிக் பைக்கை ஷோரூம்களில் பார்க்கலாம் என கூறப்பட்ட நிலையில், இதுவும் தாமதமாகியது. கடந்த சில நாட்களாக தான் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளன.
இதனால், இந்த முறை அறிவிக்கப்பட்டப்படி மே 25ஆம் தேதியில் இருந்து ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளின் டெஸ்ட் ரைடுகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஓலா ஷோரூம்களுக்கு வந்து கொண்டிருக்கும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளை பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், தற்போது காஸ்ட்லீயான லுக்கில் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் ஒன்று ஓலா ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளது.

இதற்குமுன் ஓலா ஷோரூம்களில் இருந்து வெளியான படங்களில், எளிமையான தோற்றம் கொண்ட வெள்ளை நிறத்திலான ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகள் தான் காட்சி தந்து இருந்தன. ஆனால், தற்போது வெளியாகியுள்ள படத்தில் நீல நிறத்திலான ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கை காண முடிகிறது. இது சாதாரணமான ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் கிடையாது; இது ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக் ஆகும்.
ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் எக்ஸ்+ என இரு விதமான எலக்ட்ரிக் பைக்குகள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் 2.5kWh, 3.5kWh மற்றும் 4.5kWh என 3 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக முறையே ரூ.74,999, ரூ.84,999 மற்றும் ரூ.94,999 நிர்ணயிக்கப்பட்டன.
மறுப்பக்கம், ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக் ஆனது 4.5kWh மற்றும் 9.1kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன் பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலைகளாக ரூ.1,04,999 மற்றும் ரூ.1,54,999 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த விலைகளில் ஓலா ரோஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை தற்போது வாங்க முடியாது.
ஏனெனில், மேலே குறிப்பிடப்பட்டவை எல்லாமே அறிமுக விலைகள் ஆகும். இந்த அறிமுக விலைகள் முதல் 7 நாட்களுக்கு மட்டுமே என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்தது. இந்த 7 நாட்கள் பிப்ரவரி மாதத்திலேயே நிறைவடைந்து விட்டது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் எல்லாவற்றிலும் ரூ.15,000 கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்; அதுதான் தற்போது இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் டெஸ்ட் ரைடுகள் இந்த மே மாதத்திலாவது துவங்கப்படுமா? பைக்கை நேரில் ஓட்டி பார்க்க மாட்டோமா? என நிறைய பேர் இந்த பைக்கை முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். தற்போது அதிக எண்ணிக்கையில் இந்த எலக்ட்ரிக் பைக்குகள் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், இவற்றின் டெஸ்ட் ரைடுகள் அறிவிக்கப்படி இந்த மே மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
Source: Rushlane


Click it and Unblock the Notifications








