ஓலா ஷோரூம்களில் கம்பீரமாக நிற்குது! எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வந்த எல்லாரும் இதை வாங்கிட்டு போக போறாங்க!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) என்கிற புதிய எலக்ட்ரிக் பைக் (Electric Bike) விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த ஓலா எலக்ட்ரிக் பைக் விலைகள் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இன்னும் சாலைகளுக்கு வரவில்லை. ஏனெனில், இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் (Bike Deliveries) இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால், இந்த நிலை இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிக்க போவது இல்லை. ஏனென்றால், ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகள் ஷோரூம்களுக்கு (Showrooms) வர துவங்கியுள்ளன.
ஓலா ஷோரூம் ஒன்றில் இருந்து ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் ஒன்றின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பெரியதாக அலங்காரம் இல்லாத விலை குறைவான ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் ஷோரூமுக்கு வந்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.74,999 மட்டுமே ஆகும்.

இது இல்லாமல் மிட்-வேரியண்ட் மற்றும் பிரீமியம் வேரியண்ட்களிலும் இந்த எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வேரியண்ட்களும் ஒன்றன்பின் ஒன்றாக இனி ஷோரூம்களுக்கு வர ஆரம்பிக்கும். சொல்லப் போனால், நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட எதாவது ஒரு ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் ஷோரூமை சென்றடைந்திருக்கலாம்.
மிக சமீபத்தில்தான், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் தொழிற்சாலையில் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் பணிகளை துவங்கியுள்ளதாக படத்துடன் தெரிவித்தது. தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள ஓலா தொழிற்சாலையில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் முதலாவதாக உற்பத்தி செய்யப்பட்ட ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகளை காணலாம்.

பைக்கின் வேரியண்ட்டை பொறுத்து அதில் பொருத்தப்படும் பேட்டரியின் திறனும் மாறுப்படுகிறது. அதாவது, எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் 2.5kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 140கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது ஓலா நிறுவனம். 0-இல் இருந்து 40kmph வேகத்தை இந்த விலை குறைவான ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கில் 3.4 வினாடிகளில் எட்டிவிடலாம்.
இந்த வேரியண்ட்டின் டாப்-ஸ்பீடு 105kmph ஆகும். மிட்-வேரியண்ட்டில் 3.5kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 196கிமீ தொலைவிற்கு இயங்ககூடிய இந்த மிட்-வேரியண்ட்டின் விலை ரூ.84,999 ஆகும். 0-இல் இருந்து 40kmph வேகத்தை 3.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மிட்-வேரியண்ட்டின் டாப்-ஸ்பீடு 118kmph ஆகும்.
ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கின் விலைமிக்க டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.94,999 ஆகும். இதில் 4.5kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 252கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 0-இல் இருந்து 40kmph வேகத்தை 3.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த டாப் வேரியண்ட்டின் டாப்-ஸ்பீடும் 118kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் எந்த வேரியண்ட்டில் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை வாங்குவது என்பதை முடிவு செய்வது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். மேலே கூறப்பட்டு இருப்பவை பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே, ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிரங்கள் அதிகமாக வரும் என்றாலும், மக்கள் பலரால் ஏற்கக்கூடிய விலையில்தான் ரோட்ஸ்டர் எக்ஸ் உள்ளது.
அதற்கு முக்கியமான காரணம், இந்த எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் குறைவாக நிர்ணயித்து இருப்பது ஆகும். எதிர்காலத்தில் எல்க்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடுதான் அதிகமாக இருக்க போகிறது என்பதால், ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எதிர்காலத்தில் தற்போதைய ஹீரோ ஸ்பிளெண்டரை (Hero Splendor) போல் மிக அதிக பேரால் வாங்கப்படும் பைக்காக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








