ஒரு தடவை சார்ஜ் போட்டா 320 கி.மீ போகும்! விலை ரொம்ப கம்மி தான்! ஓலாவின் புதிய ஸ்கூட்டர் பற்றி தெரியுமா?

ஓலா நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ ஸ்போர்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ1.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது ஆலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் அறிமுக விலையாக ரூ1,49,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. ரூ999 என்ற விலையில் இந்த ஸ்கூட்டரை புக் செய்ய முடியும். 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் இந்த ஸ்கூட்டரின் டெலிவரி துவங்கப்படும்.

Ola S1 Pro Sport Launched

இந்த எஸ்1 ப்ரோ ஸ்போர்ட் ஸ்கூட்டர், அதிக பெர்ஃபார்மென்ஸ் தரும் ஸ்கூட்டராக உருாவக்கப்பட்டுள்ளது. இதற்காக 13 kW மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.இந்த மோட்டாரை ஓலா நிறுவனமே தயாரித்துள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்கூட்டர் வழக்கமான ஸ்கூட்டரிலிருந்து மாறுபாடு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் சஸ்பென்சன் செட்டப் ஸ்போட்டியாக டியூன் செய்யப்பட்டுள்ளது. இதில் அடாஸ் தொழிற்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்படுவது இந்த ஸ்கூட்டரில் தான். இந்த ஸ்கூட்டரின் டிசைன் வடிவமைப்பில் ஷார்ப்பான, ஏரோடைனமிக்கான பாடி ஒர்க் செய்யப்பட்டுள்ளது.

Ola S1 Pro Sport Launched

இந்த ஸ்கூட்டரில் சிறிய விண்ட் ஸ்கிரீன், முன்பக்கம் கார்பன் ஃபைபர் ஃபென்டர்கள், கிராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சீட் வடிவமைப்பு மற்றும் அதில் உள்ள மெட்டிரீயல் மாற்றப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் கம்ஃபோர்ட் கிடைக்கிறது. லைட்டிங் செட்டப் எல்லாம் எல்இடி லைட்டுகளாக வழங்கப்பட்டுள்ளது. டே டைம் ரன்னிங் லைட் விசிலிபிளிட்டியை மேலும் அதிகரிக்கிறது.

அடாஸ் பேக்கேஜில் கோலிஷன் வார்னிங், பிளைன்ட் ஸ்பாட் அலர்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், டிராஃபிக் சிக்கனல் கண்காணிப்பு, ஸ்பீடு அலர்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் முன்பக்கம் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது டேஷ்கேமராவாகவும் செயல்படும். இதில் ரைடு முழுவதும் ரெக்கார்டு செய்யப்படும். இது திருட்டை தடுக்கவும், மீறி திருடப்பட்டால் வாகனத்தை கண்டுபிடிக்கவும் உதவும்.

Ola S1 Pro Sport Launched

மேலும் இந்த ஸ்கூட்டரில் வாய்ஸ் அசிஸ்டென்ட், கஸ்டமைஸபிள் டிஸ்பிளே தீம்கள், பெர்சனலைஸ்டு ரைடு அனலிடிக்ஸ், பராமரிப்பு அலர்ட், ஸ்மார்ட் சார்ஜிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்க்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஃபெர்ரைட் மேக்னட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் உள்ள மோட்டார் 16kW பவரையும், 71 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. இந்த ஸ்கூட்டரி்ல் 5.2kWh பேட்டரி பேக் 4680 செல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 152 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2 நொடியில் பிக்கப் செய்து விடும். இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் போட்டால் 320 கி.மீ வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளுது இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் முன்பக்க அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 34 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. இது 791 மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் அதிக பெர்ஃபார்மென்ஸ் நிறைந்த இந்த ஸ்கூட்டரை களம் இறக்கியுள்ளது. இதில் உள்ள பல அம்சங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். இந்த ஸ்கூட்டரின் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 16, 2025, 12:50 [IST]
English summary
Ola s1 pro sport launched price features range performance battery details
மேலும்... #ola #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X