ஆசை காட்டி மோசம் செய்த ஓலா! ஸ்கூட்டரை ஆசையாய் புக் செய்தவர்களின் நிலைமை என்ன?
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து அடுத்த பல புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஓலாவில் இருந்து கடந்த பிப்ரவரியில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) எலக்ட்ரிக் பைக் (Electric Bike) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் டெலிவிரிகள் மிக சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) டெலிவிரிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இந்த நிலையில், அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் இன்னும் தாமதமாகும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் மார்க்கெட்டில் நுழைந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதலாவதாக அறிமுகம் செய்தது எஸ்1 (S1) எலகட்ரிக் ஸ்கூட்டர்களை ஆகும். இன்னும் சொல்லப்போனால், ஓலா நிறுவனத்தில் இருந்து தற்போதுவரையில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் பல்வேறு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வேறு எந்த மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஓலாவின் திட்டத்தில் தற்போதைக்கு இல்லை.

எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 1.60 லட்ச ரூபாய் அளவிற்கு விலைமிக்கதாகவும் அறிமுகம் செய்துள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், அதேநேரம் 1 லட்ச ரூபாய்க்குள் குறைந்த விலையிலான எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் புதுசு புதுசாக விற்பனைக்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் வெறும் ரூ.60 ஆயிரம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் எஸ்1 இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா அறிமுகம் செய்தது.
குறைந்த விலையில், அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்றுவருவதற்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோரை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்ட எஸ்1 இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெலிவிரிகள் தற்போதுவரையில் துவங்கப்படவில்லை. அதேபோல், கடந்த ஆண்டின் இறுதியில் பிஸ்னஸ் நடத்தும் கம்பெனிகளுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கிக் (Gig) என்கிற பெயரில் எலும்பு கூடு போன்றதான டிசைனில் புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது, அந்த அளவிற்கு ஸ்கூட்டரின் உற்பத்தி செலவை குறைத்து, அதன் விலையை குறைக்கும் விதமாக பேனல்கள் அதிகமாக இன்றி ஓலா கிக் உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப வெறும் ரூ.39,999இல் கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரின் மற்றொரு கிக்+ வேரியண்ட்டின் விலை ரூ.49,999 ஆகும். இவ்வாறு, கம்பெனிகளை டார்க்கெட் செய்து ஓலா உருவாக்கியுள்ள முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிக் ஆகும்.
ஆனால், எஸ்1 இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போன்று கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளையும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதுவரையில் துவங்கவில்லை. 2025 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டெலிவிரிகள் துவங்கப்படலாம் என முன்னதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது ஜூன் மாதம் வந்துவிட்ட போதிலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டெலிவிரிகளை துவங்குவதில் இன்னும் தாமதப்படுத்த போவதாக ஓலா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal), "எஸ்1 இசட், கிக் & கிக்+ மற்றும் சில எதிர்கால தயாரிப்புகளையும் தாமதப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு தயாரிப்பும் சரியான வாடிக்கையாளர் மனநிலையை பெறும் வகையில் இந்த தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்துவோம்" என்றார். அதாவது, தற்போதைக்கு எஸ்1 இசட் மற்றும் கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து நேரத்தை வீணடிக்க போவதில்லை, வாடிக்கையாளரின் இரசனையை புரிந்துக்கொண்டு எதிர்கால தயாரிப்புகளை வழங்குவோம் என்பது பாவிஷ் அகர்வாலின் கருத்தாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஇஓ என்பதால் பாவிஷ் அகர்வாலின் கருத்துதான் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிலைப்பாடாகவும் இருக்க முடியும். அப்படியென்றால், எஸ்1 இசட் மற்றும் கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்களின் இரசனைக்கேற்ப இல்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கிடைத்த புக்கிங்கை பார்த்துதான் இவ்வாறான முடிவை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எடுத்திருக்கும் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








