ஷோரூமுக்கு வந்தவங்க செம்ம ஹாப்பி!! ஒட்டுமொத்த நாடும் வாங்க துடிக்கும் பைக்கை இனி சாலையில் பார்க்கலாம்!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) என்கிற முதல் எலக்ட்ரிக் பைக் (Electric Bike) விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி எலக்ட்ரிக் பைக்கும் கிடைக்கும். ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் விலைகள் அறிவிக்கப்பட்டு, சமீபத்தில்தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் 5,000 பேருக்கு ரூ.10,000 மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

மேலும் இதனாலேயே இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் எப்போது துவங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் உருவானது. முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கான டெலிவிரிகள் துவங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், மே மாத வந்த பின்பும் இந்த பைக்கின் டெலிவிரிகள் எப்போது துவங்கப்படும் என்பதை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவிக்காமலேயே இருந்து வந்தது.

ola roadster x delivery start

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன், ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் மே 23ஆம் தேதியில் இருந்து துவங்கப்படும் என வீடியோ உடன் சமூக வலைத்தளங்களில் ஓலா நிறுவனம் தெரிவித்தது. அதன்படி, மே 23ஆம் தேதியான இன்றில் இருந்து ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன.

புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்க ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகள் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், லாரியில் ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்ட ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகளை இளைஞர்கள் சிலர் இறக்கி ஷோரூமுக்குள் ஓட்டிச் செல்வதை காண முடிகிறது.

தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள ஓலா தொழிற்சாலையில் இருந்து ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகள் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ஷோரூம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஷோரூம்களுக்கு வர துவங்கிவிட்டதால், மே 23ஆம் தேதியான இன்றில் இருந்தே இந்த எலக்ட்ரிக் பைக்கை கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்ய துவங்கி இருப்பர்.

இந்த எலக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்த முதல் 5,000 கஸ்டமர்களுக்கு ரூ.10,000 மதிப்பில் உத்தரவாதம் நீட்டிப்பு, மூவ் ஒ.எஸ்+ (Move OS+) மற்றும் முக்கிய பைக் பராமரிப்புகள் கிடைக்கும். எங்களுக்கு தெரிந்தவரையில், ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் முதல் 5,000 முன்பதிவுகளை ஏற்கனவே கடந்திருக்கும்.

ola roadster x delivery start

கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் மொத்தம் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 2.5kWh பேட்டரி உடன் இந்த எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.99,999 ஆகவும், 3.5kWh பேட்டரி உடன் ரூ.1,09,999 ஆகவும், 4.5kWh பேட்டரி உடன் ரூ.1,24,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் மட்டுமின்றி, ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக்கும் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4.5kWh பேட்டரி மற்றும் 9.1kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1,29,999 (4.5kWh) மற்றும் ரூ.1,99,999 (9.1kWh) ஆக உள்ளன. பேட்டரியை பொறுத்து பைக்கின் ரேஞ்ச் வேறுப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கிற்கு இணையாக, இந்தியாவின் எலக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் கருதப்படுகிறது. இத்தகைய பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் இந்த எலக்ட்ரிக் பைக்குகளை சாலையில் காணலாம். வருங்காலத்தில் இதுபோன்று மேலும் சில எலக்ட்ரிக் பைக்குகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2025, 23:04 [IST]
English summary
Ola starts delivery of roadster x electric bike in india price battery all details here
மேலும்... #Ola Electric Motorcycle #delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+