ஸ்டாக்கை முழுசா காலி பண்ண முடிவு பண்ணிட்டாங்க.. 10க்கும் மேற்பட்ட இ-ஸ்கூட்டர்களின் விலையை குறைச்சிருக்காங்க!

ஒகாயா இவி (Okaya EV), தற்போது ஓபிஜி மொபிலிட்டி (OPG Mobility), என்கிற பெயர் மாற்றத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த நிறுவனமே தற்போது அதன் பிரபல இ-ஸ்கூட்டர் மாடல் ஒன்றின் விலையை மிகப் பெரிய அளவில் குறைத்து இருக்கின்றது. ரீ-பிராண்ட் செய்ததைத் தொடர்ந்து தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த வேலையை அந்நிறுவனம் பார்த்திருக்கின்றது. குறிப்பாக, ரீ-பிராண்டிற்கு பின்னர் தங்களுடைய தயாரிப்புகள் விலை குறைவானதாக கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இவ்வாறு செய்திருக்கின்றனர்.

ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரத்து 600 வரை விலை குறைப்புச் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த விலை குறைப்பால் ஃபெர்ரடோ ஃபாஸ்ட் எஃப்4 இ-ஸ்கூட்டர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 ஆக குறைந்திருக்கின்றது.

Opg mobility cuts prices for ferrato e-scooters

முன்னதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ரூ. 1,18,999-க்கு விற்பனைச் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், ஃபெர்ரட்டோ ஃபாஸ்ட் 2 மற்றும் ஃபாஸ்ட் எஃப்2பி ஆகிய மாடல்களின் விலையையும் குறைத்திருக்கின்றனர். ரூ. 89,999 ஆகவே குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் முந்தைய விலை ரூ. 94,999 ஆகும்.

இதுதவிர, ஃபாஸ்ட் எஃப்2எஃப் மாடலின் விலையையும் குறைத்திருக்கின்றனர். ரூ. 93,999 ஆக இருந்த விலையை தற்போது ரூ. 79,999 ஆக குறைத்திருக்கின்றனர். இத்துடன், ரூ. 75,999க்கு விற்பனைச் செய்யப்பட்ட ஃபெர்ரட்டோ கிளாசிக் தற்போது ரூ. 59,999க்கு விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

மேலும், ஃபெர்ரட்டோ எல்ஐ மாடலின் விலை ரூ. 75,899இல் இருந்து தற்போது ரூ. 69,999 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. ஃபெர்ராரி ஃப்ரீடம் எல்ஏ ரூ. 55,650 இல் இருந்து தற்போது ரூ. 49,999 ஆக குறைக்கப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இதோடு நிறுவனம் நிறுத்திக் கொள்ளவில்லை. ஓபிஜி மொபிலிட்டி நிறுவனம் ஃபெர்ரடோ டிஸ்ரப்டர் ரூ. 1,59,999 இல் இருந்து 1,54,999 ஆகவும், ஃபோர்ரட்டோ மோட்டோ ஃபாஸ்ட் மாடலின் விலை ரூ. 1,38,999 இல் இருந்து ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 999 ஆகவும் குறைக்கப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமல்ல இறுதியாக ஃபெர்ரட்டோ ஃபாஸ்ட் எஃப்3 ரூ. 1,08,999இல் இருந்து 1,04,999 ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே இத்தனை மாடல்களின் விலையை ஓபிஜி மொபிலிட்டி நிறுவனம் குறைத்திருக்கின்றது. இதுமட்டுமல்ல இப்போது வரை தயாரித்திருக்கும் முழு ஸ்டாக்கையும் கிளியர் செய்யும் நோக்கிலும் இந்த சலுகையை அறிவித்திருப்பதாக யூகிக்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன சந்தையை தற்போது பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களே ஆக்கிரமிப்புச் செய்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு சவால்விடும் நோக்கிலேயே தற்போது ஓபிஜி மொபிலிட்டி நிறுவனம் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை எடுத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, March 7, 2025, 22:33 [IST]
English summary
Opg mobility implements significant price reductions for ferrato scooter line in india
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+