காஸ்ட்லீயான ஸ்கூட்டர்கள்னு இனி சொல்ல முடியாது! மத்திய அரசுக்கு தான் நன்றி சொல்லனும்!

மத்திய அரசாங்கம் சமீபத்தில் ஜிஎஸ்டி (GST)-இல் திருத்தங்களை கொண்டுவந்ததை பற்றி நிச்சயமாக அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைகிறேன். ஏனெனில், இந்த புதிய ஜிஎஸ்டி திருத்ததால் நாட்டில் பல பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி திருத்தங்கள் நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளன.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்த புதிய ஜிஎஸ்டி 2.0 திருத்தங்களால் குறைவான விலையிலான கார் & பைக்குகளின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. அதன்படி, பியாஜியோ (Piaggio) நிறுவனம் தனது வெஸ்பா (Vespa) மற்றும் ஏப்ரிலியா (Aprilia) ஸ்கூட்டர்களின் விலைகளைக் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

vespa and aprilia scooters price cut

குறிப்பாக, ஏப்ரிலியா எஸ்.ஆர் 175 (SR 175) மற்றும் வெஸ்பா எஸ் டெக் 149 (S Tech 149) போன்ற விலை குறைவான வெஸ்பா & ஏப்ரிலியா ஸ்கூட்டர்களும் இதில் அடங்கும். புதிய ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, பிரீமியம் ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் மிகவும் மலிவான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 2.0 வரிச் சலுகைகளால் 350cc-க்கும் குறைவான இருசக்கர வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளன. இந்த வரிச் சலுகையின் முழுப் பலனையும் பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இதன் மூலம் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களை இந்தியா முழுவதும் எளிதாக வாங்க முடியும்.

vespa and aprilia scooters price cut

வெஸ்பா ஸ்கூட்டர்களின் விலையில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரபலமான மாடல்களான வெஸ்பா இசட்.எக்ஸ் (ZX), வெஸ்பா 125 மற்றும் வெஸ்பா எஸ் ஆகியவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறைந்துள்ளன. முன்னர் ரூ.1.20 லட்சம் விலையில் இருந்த வெஸ்பா இசட்.எக்ஸ், தற்போது ரூ.1.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது.

ஒட்டுமொத்தமாக, வெஸ்பா ஸ்கூட்டர்களின் விலைகள் இப்போது ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.94 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள், பிரீமியம் ஸ்டைலுடன் தினசரி பயன்பாட்டிற்கான ஸ்கூட்டர்களைத் தேடும் நகரப் பயணிகளுக்கு ஏற்றவையாக இருக்கும். வெஸ்பா எஸ் டெக் 149 ஸ்கூட்டரின் விலை முன்னர் ரூ.2.12 லட்சமாக இருந்தது.

vespa and aprilia scooters price cut

தற்போது அது ரூ.1.94 லட்சத்திற்குக் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட ஸ்கூட்டர்களை விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் விலையிலும் ஜிஎஸ்டி சார்ந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விலை குறைவான ஏப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் விலைகள் தற்போது ரூ.1.10 லட்சத்தில் தொடங்குகின்றன.

இது, 125சிசி ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் போட்டியை அதிகரிக்கும். ஏப்ரிலியா ஸ்டோர்ம் (Storm) மற்றும் எஸ்.ஆர் 175 போன்ற பிற ஸ்கூட்டர்களும் புதிய விலைகளில் கிடைக்கின்றன. இதன் மூலம், ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் புதிய விலைகள் ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.17 லட்சம் வரை உள்ளன.

வெஸ்பா & ஏப்ரிலியா ஸ்கூட்டர்களின் புதிய விலைகள் (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா):

மாடல் பழைய விலை (GSTக்கு முன்) புதிய விலை (GST மாற்றத்திற்குப் பிறகு)
வெஸ்பா ZX ₹1,20,488 ₹1,10,230
வெஸ்பா 125 ₹1,33,820 ₹1,22,427
வெஸ்பா 125 இரட்டை நிறம் ₹1,35,743 ₹1,24,186
வெஸ்பா S 125 ₹1,39,021 ₹1,27,185
வெஸ்பா S 125 இரட்டை நிறம் ₹1,40,436 ₹1,28,481
வெஸ்பா 149 ₹1,48,956 ₹1,36,273
வெஸ்பா 149 இரட்டை நிறம் ₹1,51,091 ₹1,38,225
வெஸ்பா S 149 ₹1,51,826 ₹1,38,898
வெஸ்பா S 149 இரட்டை நிறம் ₹1,53,957 ₹1,40,848
வெஸ்பா டெக் 125 ₹1,94,216 ₹1,77,679
வெஸ்பா 125 காலா ₹1,94,216 ₹1,77,679
வெஸ்பா S டெக் 125 ₹1,98,135 ₹1,81,265
வெஸ்பா டெக் 149 ₹2,07,820 ₹1,90,123
வெஸ்பா டெக் 149 காலா ₹2,07,820 ₹1,90,122
வெஸ்பா S டெக் 149 ₹2,12,228 ₹1,94,155
மாடல் பழைய விலை (GSTக்கு முன்) புதிய விலை (GST மாற்றத்திற்குப் பிறகு)
ஏப்ரிலியா ஸ்டோர்ம் ₹1,20,260 ₹1,10,865
SR 125 ₹1,19,999 ₹1,10,180
SR 175 ₹1,27,999 ₹1,17,521

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பியாஜியோ நிறுவனம் இந்த விலை மாற்றங்களால், இளைஞர்கள் மற்றும் ஸ்டைல்-சார்ந்த, செயல்திறன் மிக்க ஸ்கூட்டர்களைத் தேடும் வாடிக்கையாளர்களை ஈர்த்து, வரும் காலங்களில் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் இருசக்கர வாகன வாடிக்கையாளர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் முழுப் பலனையும் பியாஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2025, 13:58 [IST]
English summary
Piaggio india announced updated prices for vespa and aprilia scooters check all details here
மேலும்... #aprilia #vespa #price cut #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X