எல்லாரும் அவங்கவங்க குல தெய்வத்த வேண்டிக்கோங்க.. 400 கோடி ரூபா தமிழகத்தின் கையை விட்டு போயிட கூடாது..
எல்லாரும் அவங்கவங்க குல தெய்வத்த வேண்டிக்கோங்க. ஓர் முன்னணி நிறுவனம் தென்னிந்தியாவில் தன்னுடைய மிகப் பெரிய ஆலையை அமைப்பதற்கான திட்டத்தில் இருக்கின்றது. இதற்காக பெரும் தொகையை அவர்கள் முதலீடு செய்ய இருக்கின்றனர். ப்யூர் இவி (Pure EV) நிறுவனமே அது ஆகும். இது சுமார் 400 கோடி ரூபாயை தன்னுடைய புதிய ஆலைக்காக முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. தென்னிந்தியாவில் உள்ள ஓர் மாநிலத்திலேயே தன்னுடைய புதிய ஆலையை அமைக்க அது திட்டமிட்டு இருக்கின்றது. இந்த ஆலை நம் தமிழ்நாடு வசம் வர வேண்டும் என்பதே இப்போது பலரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கின்றது.
ஏற்கனவே முன்னணி நிறுவனங்கள் பலவற்றிற்கு நம் தமிழகம் தாயகமாக மாறியிருக்கின்றது. ஆகையால், இந்த புதிய நிறுவனத்திற்கும் தமிழ்நாடு தத்து தாயாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் வீசினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். ஏனெனில், கர்நாடகா எனும் மிக முக்கியமான போட்டியாளர் தென்னிந்தியாவில் இருக்கின்றது.

இது தன் பக்கம் அந்த நிறுவனத்தை வளைத்துப் போடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான முயற்சிகளை விரைவில் கர்நாடகா அரசு மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்தியாவின் மற்றும் உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பல நம் தமிழகத்திலேயே மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைத்திருக்கின்றன.
எனவே ப்யூர் இவி நிறுவனமும் நம் தமிழகத்தில் தன்னுடைய புதியை ஆலையை அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நம் தமிழகத்தில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) மற்றும் ஏத்தர் எனெர்ஜி (Atherf Energy) போன்ற நிறுவனங்களே நம் தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைத்திருக்கின்றன.
இதுதவிர, வின்ஃபாஸ்ட் (VinFast) எனும் உலக புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனமும் தற்போது புதிதாக தன்னுடைய உற்பத்தி ஆலையை தென் தமிழகத்தில் அமைத்து வருகின்றது. இங்கு எலெக்ட்ரிக் கார்களை மட்டுமல்ல எலெக்ட்ரிக் டூ-வீலர்களையும் தயாரிக்க வின்ஃபாஸ்ட் திட்டமிட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
எனவே ப்யூர் இவி-யும் நிச்சயம் தன்னுடைய பார்வையை தமிழகம் பக்கம் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவம் 2027 ஆம் ஆண்டிற்கு இந்தியாவில் 320 புதிய டீலர் மையங்களைத் திறக்க திட்டமிட்டு இருக்கின்றது. மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் தன்னுடைய மொத்த டீலர்ஷிப்புகளை அது 800 ஆக உயர்த்துவதற்கான பிளானையும் வகுத்து இருக்கின்றது.
இதுமட்டுமல்ல தன்னுடைய தயாரிப்புகளை உலக நாடுகள் சிலவற்றிற்கு எடுத்துச் செல்லவும் அது திட்டமிட்டிருக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலேயே தன்னுடைய கால் தடத்தை பதிக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்த மிகப் பெரிய திட்டங்களை அடுத்தே நிறுவனம் தற்போது புதிய ஆலையை அமைப்பதற்கான முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலில் நிறுவனத்தின் ஆலை தமிழகத்தில் அமையும் எனில், இங்கு தயாரிக்கப்படும் வாகனங்களே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆகையால், ஒட்டுமொத்த உலக நாடுகளும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் ப்யூர் இவி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்தும் சூழல் உருவாகக் கூடும்.
ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் யூனிட்டுகள் அளவிற்கு வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட ஆலையாகவே தன்னுடைய புதிய உற்பத்தி ஆலையை ப்யூர் இவி உருவாக்க இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள கண்டி கிராமத்தில் அமைந்திருக்கின்றது.
இங்கு வைத்தே தன்னுடைய முக்கிய தயாரிப்புகளான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளை ப்யூர் இவி தயாரித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்தே, மேலும் ஓர் புதிய ஆலையை அமைக்க உள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய புதிய எக்ஸ் பிளாட்பாரம் 3.0-வை அறிமுகம் செய்தது. இதன் அறிமுகத்தைத் தொடர்ந்தே தன்னுடைய புதிய முதலீடு குறித்த தகவலை நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ப்யூர் இவி நிறுவனம் அதிக ஷோரூம்களையும், தன்னுடைய உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு இருக்கின்றது. எனவே நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications