சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரா வந்து ஒரு ரவுண்டு கேட்க போறாங்க! கோடி கோடியாய் பணம் இருந்தாலும் வாங்குறது கஷ்டம்!

டுகாட்டி (Ducati) பைக்குகள் உலகளவில் பிரபலமானவை மற்றும் அதேநேரம் விலையுயர்ந்தவை ஆகும். இதனாலேயே இந்தியாவில் டுகாட்டி பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படியே இந்தியாவில் டுகாட்டி பைக்கை வாங்கினாலும், அது உலகளவில் அதிக பேரால் வாங்கப்படும் பிரபலமான டுகாட்டி பைக்காகவே இருக்கிறது. இந்த நிலையில், மிகவும் அரிதான டுகாட்டி பைக் ஒன்றை இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார். என்ன மாதிரியான டுகாட்டி பைக் அது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

டுகாட்டி நிறுவனமும், உலகின் பிரபலமான லக்சரி கார் நிறுவனமான பெண்ட்லீ (Bentley)-யும் 2023ஆம் ஆண்டில் கூட்டணி சேர்ந்த விஷயத்தை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த கூட்டணியில் பிரத்யேகமான டுகாட்டி பைக்கும், பெண்ட்லீ காரும் உருவாக்கப்பட்டன. அதாவது, இந்த நிறுவனங்களின் வடிவமைப்புகளை கலந்து பைக் & கார் உருவாக்கப்பட்டது.

rare ducati diavel bentley

இதன்படி, டுகாட்டியின் பிரபலமான டியாவெல் (Diavel) பைக்கில் 'டியாவெல் ஃபார் பெண்ட்லீ' என்கிற பெயரில் லிமிடெட் எடிசன் (Limited Edition) உருவாக்கப்பட்டது. உலகளவில் மொத்தமாகவே வெறும் 500 டியாவெல் ஃபார் பெண்ட்லீ பைக்குகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. இத்தகைய அரிதான டுகாட்டி பைக்கை தான் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஷோரூம் மூலமாக அந்த நபர் தனது டுகாட்டி டியாவெல் ஃபார் பெண்ட்லீ பைக்கை டெலிவிரி பெறும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டது வேறு யாருமில்லை, சம்பந்தப்பட்ட டுகாட்டி டீலர்ஷிப் ஷோரூம் ஆகும். டுகாட்டி டியாவெல் பெண்ட்லீ பைக் ஆனது பிரத்யேகமான ஸ்கார்ப் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதை வீடியோவில் காணலாம்.

டுகாட்டி மற்றும் பெண்ட்லீ கூட்டணியில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு டியாவெல் ஃபார் பெண்ட்லீ பைக்குகளிலும் வரிசைப்படி எண் பொறிக்கப்படுகிறது. தற்போது டெல்லியில் டெலிவிரி செய்யப்பட்டுள்ள இந்த பச்சை நிறத்திலான டியாவெல் ஃபார் பெண்ட்லீ பைக்கிலும் '417/500' என்கிற எண் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். மொத்தமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள 500 பைக்குகளில் இது 417வது பைக் என்பதை இது குறிக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு பைக்கிலும் பிரத்யேகமான எண் பொறிக்கப்படுவது மட்டுமின்றி, டியாவெல் ஃபார் பெண்ட்லீ பைக் ஒவ்வொன்றும் தனி கவனத்துடன் மிகவும் பிரத்யேகமாக வெளிநாட்டில் உள்ள டுகாட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே இந்த லிமிடெட் எடிசன் பைக்கிற்கு 58 ஆயிரம் பவுண்ட்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.61 லட்சத்து 44 ஆயிரம் ஆகும்.

பெண்ட்லீ நிறுவனம் உருவாக்கிய மிக பவர்ஃபுல்லான காரான 'படுர்' (Batur)-இன் அடிப்படையில் டியாவெல் ஃபார் பெண்ட்லீ லிமிடெட் எடிசன் பைக்கை உருவாக்கி உள்ளனர். தோற்றத்தில் மட்டுமே இந்த லிமிடெட் எடிசன் பைக் வேறுப்பட்டு தோற்றமளிக்கிறதே தவிர்த்து, என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, டுகாட்டி டியாவெல் பைக்கில் வழக்கமாக வழங்கப்படும் அதே 1,158சிசி வி4 கிராண்டுரிஸ்மோ என்ஜின் தான் இந்த லிமிடெட் எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 10750 ஆர்பிஎம்-இல் 166.28 பிஎச்பி மற்றும் 7500 ஆர்பிஎம் வேகத்தில் 126 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 299கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த பைக் ஆனது உலகிலேயே மிக வேகமாக இயங்கக்கூடிய, பொது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளுள் ஒன்றாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, டுகாட்டி பைக் என்றாலே சாலையில் தனித்து தெரியக்கூடியவை. அதிலிலும் இந்த பைக் பிரத்யேகமான பச்சை நிறத்தில் உருவாக்கப்பட்டு உள்ளதால், சாலையில் செல்லும் எவரொருவரும் நிச்சயமாக இந்த பைக்கை ஒரு நொடி ஆச்சிரியமாக பார்ப்பர். இத்தகைய பைக் இந்திய சாலைகளில் ஓட போகிறது என்பதை நினைக்கவே ஆச்சிரியமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 12, 2025, 19:48 [IST]
English summary
Rare ducati diavel bentley bike delivered in india delhi check price features all details here
மேலும்... #ducati #delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+