ஹெல்மெட் மாதிரி பைக் ரைடர்களுக்கு இதுவும் கட்டாயம்! உசுரையே பாதுகாக்கும்னா சும்மாவா?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான ரைடிங் கியர்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது. இது ராயல் எஃபீல்டு பைக் போல பிரபலமானதாக இருக்கிறது. தீவிரமாக ரைடிங் செய்பவர்கள் பலர் இந்த கியர்களை ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் CROSSROADER PRINT RIDING JACKET - RED என்ற ரைடிங் கியரை நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் வாங்கியுள்ளனர். இது குறித்த விமர்சனத்தை காணலாம் .
வழக்கமாக பைக் ஓட்டும் போது ரைடிங் கியர்கள் கட்டாயம் அணிய வேண்டும். அப்பொழுது தான் ஆபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும். இந்நிலையில் நாம் ராயல் என்ஃபீல்டு தளத்தலிருந்து CROSSROADER PRINT RIDING JACKET - RED என்ற ரைடிங் ஜாக்கெட்டை ஆர்டர் செய்திருந்தோம். இது ரூ14,950 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஆன்லைனில் தற்போது ஆஃபர் போடப்பட்டள்ளதால் நாம் வெறும் ரூ11,500க்கு வாங்கினோம். 23 சதவீத தள்ளுபடி ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த CROSSROADER PRINT RIDING JACKET-ஐ பொருத்தவரை 610D பாலிஸ்டர் சூப்பர்ஃப்ளோ மெஷ் உடன் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்டிமல் வென்டிலேஷன் உள்ளது. இது போக வேகமாக சென்று கீழே விழுந்தாலும் நமது உடலில் சிராய்ப்பு ஏற்பாடமல் பாதுகாக்கும் பாலிஸ்டர் ஃபேப்ரிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் விபத்து நடக்கும் போது நமது உடலுக்கு வரும் இம்பேக்டை குறைக்க KNOX மைக்ரோலாக் சிஇ லெவல் 1 பாதுகாப்பு நெஞ்சு பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. முதுகு பகுதியில் ராயல் என்ஃபீல்டு எர்கோ ப்ரோ டெக் ஆர்மர்ஸ் சிஇ2 லெவல் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தோல்பட்டை பகுதியை பாதுகாக்க டைட்டானியம் மெட்டல் ஸ்லைடர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

இதில் Cordura fabric என்ற துணி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சிராய்ப்பு, கிழிவது, உரசும் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இந்த ஜாக்கெட் 8000 மிமி தண்ணீர் ரெசிஸ்டென்ஸ் கொண்டது. இந்த ஜாக்கெட் அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் அட்ஜெஸ்டபிள் ஸ்டிராப்கள் மற்றும் வெல்க்ரோ வழங்கப்பட்டுள்ளது. ஸ்லீவ் பகுதி, இடுப்பு பகுதிகளில் ஸ்டிராப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் கஸ்டமைசேஷன் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. வெல்க்ரோ பாக்கெட்டாக ஐடிகார்டு பாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ரிஃப்லெக்ஷன் அம்சங்கள் உள்ளன. இதனால் குறைவான வெளிச்சம் இருந்தாலும் ரைடர் பயணிப்பது மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும். மேலும் இதில் பொருட்களை வைக்க பல்வேறு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஜாக்கெட்டில் பிராக்டிக்காலிட்டி அம்சத்தை அதிகரிக்கிறது.
இந்த ஜாக்கெட்டிற்கான விமர்சன வீடியோ டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில் அன்பாக்ஸிங் முதல் இதன் அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெளிவாகவும், விளக்கமாகவும் வழங்கியுள்ளோம். இந்த வீடியோவை நீங்கள் முழுமையாக காணலாம். இந்த தயாரிப்பை நீங்கள் வாங்க வேண்டும் என நினைத்தாலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான தளம் அல்லது அருகில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களில் வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பைக் ரைடு செய்பவர்கள் பலர் ரைடிங் கியர்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். ஹெல்மெட் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு ரைடிங் கியர்களும் முக்கியம் தான். இதனால் நீங்களும் பைக்கில் செல்லும் போது ரைடிங் கியர்களுடன் பயணம் செய்யுங்கள் இதனால் பெரிய அளவில் விபத்துக்களில் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications








