சென்னை அண்ணா சாலையில் ஷோரூம் பளபளக்குது... இந்தியாவில் மொத்தமாகவே 5 ஷோரூம்ஸ் மட்டும்தான் இருக்கு!
ரெய்ஸ் மோட்டோ (ReiseMoto), இந்தியாவில் பிரீமியம் தரத்திலான டயர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான ஆக்ஸஸரீகள் (accessories) & பைக் ரைடர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்வதில் நிபுணத்துவமிக்க மற்றும் அனுபவமிக்க நிறுவனமாக விளங்குகிறது. இருப்பினும், பல வருடங்களாக நிறுவனங்கள் உடன் மட்டுமே வணிகம் செய்துவந்த ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் சமீபத்தில் பொது சில்லறை விற்பனை வணிகத்தில் இறங்கியது. அதாவது, நேரடியாக மக்களிடத்தில் ரெய்ஸ் மோட்டோவின் தயாரிப்புகள் விற்பனை செய்ய ஆரம்பித்தது.
இவ்வாறான வணிகத்தை துவங்கியதுடன், நாடு முழுக்க ஷோரூம்களை திறக்க ரெய்ஸ் மோட்டோ முடிவெடுத்தது. அதன்படி, முதற்கட்டமாக நாட்டின் முக்கியமான மாநகரங்களில் ரெய்ஸ் மோட்டோவின் ஷோரூம்கள் ஒன்றன்பின் ஒன்றாக உடனுக்குடன் திறக்கப்பட்டன. நமது சென்னை (Chennai)-இல் கூட ரெய்ஸ் மோட்டோவின் முதல் ஷோரூம் ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது.

சென்னையின் பரபரப்பான அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் ரெய்ஸ் மோட்டோ ஷோரூம் கடந்த மார்ச் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது, புனே (Pune)-இல் தனது முதல் ஷோரூமை ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் திறந்துள்ளது. இதன் மூலமாக, இந்த டயர் & பைக் ஆக்ஸஸரீஸ் நிறுவனத்தின் ஷோரூம்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை, புனேவுக்கு முன்பாக மும்பை, டெல்லிக்கு அருகே குருக்கிராம் மற்றும் பெங்களூருவில் ரெய்ஸ் மோட்டோவின் ஷோரூம்கள் திறக்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக சுமார் 15 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவிற்கு ரெய்ஸ் மோட்டோவின் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.

ரெய்ஸ் மோட்டோவின் ஷோரூம்களில் பிரீமியம் தரத்திலான ரைடிங் கியர், ஹெல்மெட்கள் (Helmets), ஜாக்கெட்ஸ் (Jackets), க்ளோவ்ஸ் (Gloves), லக்கேஜ் (Luggage) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் டயர்கள் (Performance Tyres) உள்ளிட்டவை கிடைக்கும். இந்த பொருட்கள் யாவும் உலகம் முழுக்க உள்ள 30க்கும் அதிகமான டாப் பிராண்ட்களில் இருந்து ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறது.
இந்த 30க்கும் அதிகமான டாப் பிராண்ட்களில் ஏசர்பைஸ் (Acerbis), ஸ்பிடி (SPIDI), டுகானோ அர்பனோ (Tucano Urbano), இக்சன் (Ixon) உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்குகின்றன. குறிப்பாக, பைக்குகளுக்காக 125க்கும் அதிகமான ஐரோப்பிய பெர்ஃபார்மன்ஸ் டயர் மாடல்களை ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவருகிறது.

ரெய்ஸ் மோட்டோவின் ஷோரூம்களில் பைக்கிற்கான டயர்கள் மற்றும் ஆக்ஸஸரீகள் விற்பனை செய்யப்படுவதுடன், பல்வேறு விஷயங்களையும் ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த பல்வேறு விஷயங்களுள் சிலவற்றையாக, மோட்டோஜிபி பந்தயங்களை நேரலையாக ஒளிப்பரப்புவது, புதிய பைக் ரைடர்களை உருவாக்கும் விதமாக அனுபவம் வாய்ந்த பைக் ரைடர்கள் உடனான கலந்துரையாடல்களை வழங்குவது போன்றவற்றை ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைக்கு 5 நகரங்களில் மட்டுமே ரெய்ஸ் மோட்டோ நிறுவனத்தின் ஷோரூம்கள் உள்ளன என்றாலும், மார்க்கெட்டில் ஏற்கனவே பல தொடர்புகளை கொண்ட பைக் டயர் & ஆக்ஸஸரீஸ் நிறுவனமாக ரெய்ஸ் மோட்டோ விளங்குவதால், விரைவில் இந்த 5 என்கிற எண்ணிக்கையை அதிகரிக்கும். இதற்கான வேலைகளிலும் ஏற்கனவே ரெய்ஸ் மோட்டோ ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.


Click it and Unblock the Notifications









