113 கிலோவில் புது பைக் என்றால் எல்லாராலும் ஹேண்டில் செய்ய முடியும்! ஸ்பிளெண்டர் விற்பனைக்கு பாதிப்பு இல்லையே?

ரிவோல்ட் மோட்டார்ஸ் (Recolt Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-களை உற்பத்தி செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. ரிவோல்ட் நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே ஆர்வி400 (RV400) எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதியதாக பிளேஸ் எக்ஸ் (Blaze X) என்கிற எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு புத்தம் புதியதாக வந்திருக்கும் ரிவோல்ட் பிளேஸ் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் 5 முக்கியமான சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தோற்றம்: முடிந்தவரையில் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியாக பல காலமாக பைக்குகளுக்கே உண்டான டிசைனில் பிளேஸ் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தேவையான பாடி பேனல்களை மட்டுமே கொண்டிருக்கும் இது ஒரு எலக்ட்ரிக் பைக் என்பதால் எடை இன்னும் குறைவாக வெறும் 113 கிலோ ஆக உள்ளது.

revolt blaze x specifications

பேட்டரி & மோட்டார்: ரிவோல்ட் பிளேஸ் எக்ஸ் பைக்கில் 3.24kWh திறன் கொண்ட, பைக்கில் இருந்து வெளியே எடுக்கக்கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ள இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது ரிவோல்ட் நிறுவனம்.

அதிகப்பட்சமாக மணிக்கு 85கிமீ வேகம் வரையில் மட்டுமே செல்லக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கை நகரத்திற்குள் அன்றாட போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். வீட்டில் பயன்படுத்தக்கூடிய சார்ஜரின் உதவியுடன் பேட்டரியை 3.5 மணிநேரத்தில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பி விடலாம். பேட்டரியை தனியாக கழற்றி எடுத்து சென்று சார்ஜ் செய்ய வேண்டும்.

revolt blaze x specifications

சஸ்பென்ஷன் & பிரேக் (Suspension & Brake): பாதுகாப்பான மற்றும் சவுகரியமான பயணத்திற்கு பிளேஸ் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் டெக்னாலஜி இணைக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜி ஆனது பிரேக் சிஸ்டத்தில் வீணாகும் ஆற்றலை மீண்டும் பேட்டரிக்கே கொண்டு செல்லும்.

தொழிற்நுட்ப வசதிகள்: ஃபுல் எல்இடி விளக்குகள், 6 இன்ச்சில் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை என மாடர்ன் வசதிகளில் புதிய பிளேஸ் எக்ஸ் ஜொலிக்கிறது. இதில், இன்ஸ்ட்ரூமெண்ட் திரை ஆனது ஸ்மார்ட்போன் உடன் இணைக்கும் வசதியை கொண்டுள்ளது. ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட்களையும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் அவ்வப்போது பெற முடியும்.

revolt blaze x specifications

விலை: புதிய பிளேஸ் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1.14 லட்சமாக ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் விலை குறைவான எலக்ட்ரிக் பைக்காக இதனை சொல்லலாம். இதனால், கஸ்டமர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்க ஆரம்பித்துவிட்டால் இந்த எலக்ட்ரிக் பைக்கை சாலை எங்கிலும் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் பைக்கை வாங்க இப்போதும் சிலர் தயங்குவதற்கு காரணம், வாங்கிய பிறகு அவற்றின் ஆஃப்டர்-சேல்ஸ் & சர்வீஸ் எப்படி இருக்குமோ என்கிற பயம் தான். ஆதலால், மேற்கூறப்பட்ட 5 அம்சங்களில் சிறப்பானதாக இருந்தாலும், புதிய பிளேஸ் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கு ரிவோல்ட் நிறுவனம் கொடுக்கும் உத்தரவாதமும், ஆஃப்டர்-சேல்ஸ் & சர்வீஸும் தான் முக்கியமாகும். இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகளை வருகிற மே மாதத்தில் ரிவோல்ட் துவங்கவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 28, 2025, 8:00 [IST]
English summary
Revolt blaze x electric bike specifications to know
மேலும்... #revolt #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X