ஷோரூமை திறந்தாச்சு, இனி பைக்குகளை விற்க வேண்டியதுதான்! இந்தியாவில் ஆரம்பித்த பிஸ்னஸ் வெளிநாட்டிலும் இப்போது!

ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) உற்பத்தி செய்யக்கூடிய மிகவும் சில நிறுனங்களுள் ஒன்று. இந்தியவின் மிக பெரும் க்ரூப் ஆன ரத்தன்இந்தியா (RattanIndia)-இன் கீழ் செயல்படும் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம்.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் (Electric Scooters) அறிமுகம் செய்யும் திட்டத்தை வைத்திருந்தாலும், தற்போதைக்கு எலக்ட்ரிக் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்கிறது. ஒருபக்கம் புது, புது எலக்ட்ரிக் வாகனங்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதோடு, மறுப்பக்கம் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக உள்ளது.

revolt motors in nepal

அதன்படி, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் (Nepal) தனது எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய கடந்த பல மாதங்களாக அதற்கான வேலைகளில் ரிவோல்ட் ஈடுப்பட்டு வந்தது. அதன் மூலமாக தற்போது நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு (Kathmandu)-இல் தனது முதல் டீலர்ஷிப் ஷோரூமை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் திறந்து உள்ளது.

இதற்காக நேபாளம் நாட்டில் ஆட்டோமொபைல் (Automobile) துறையில் முன்னணியில் இருக்கும் எம்வி துகார் க்ரூப் (MV Dugar Group) உடன் ரிவோல்ட் மோட்டார்ஸ் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த எம்வி துகார் க்ரூப் ஆனது சுமார் 50 வருடங்களுக்கும் மேல் நேபாள ஆட்டோமொபைல் சந்தையில் செயல்பட்டுவரும் அனுபவமிக்க நிறுவனம் ஆகும். நேபாளத்தின் ஆட்டோமொபைல் சந்தையை நன்கு கரைத்து குடித்திருப்பதுடன், அந்த நாட்டு மக்களின் நம்பிக்கையையும் கொண்டதாக எம்வி துகார் க்ரூப் உள்ளது.

revolt motors in nepal

இதைவிட முக்கியம் என்னவென்றால், எம்வி துகார் க்ரூப்புக்கு நேபாளத்தில் நன்கு பரந்து விரிந்த சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் உள்ளது. ஆனால் அவற்றை முழுமையாக ரிவோல்ட் மோட்டார்ஸ் பயன்படுத்த போவதில்லை. தனக்கான அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காக எலக்ட்ரிக் பைக்குகளை விற்கவும் சர்வீஸ் செய்யவும் சொந்தமாக ஷோரூம்களை ரிவோல்ட் நிறுவி வருகிறது. நிச்சயமாக இதற்கு எம்வி துகார் க்ரூப்பின் உதவியில்லாமல் இருக்காது.

தற்போது தலைநகர் காத்மண்டுவில் திறக்கப்பட்டுள்ள முதல் ஷோரூம் ஆனது நேபாளத்தில் ரிவோல்ட் நிறுவனத்தின் மையப் புள்ளியாக செயல்பட உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க இந்த முதல் நேபாளம் ஷோரூம் திறப்பு நிகழ்ச்சியில் ரிவோல்ட் மோட்டார்ஸின் வணிக பிரிவின் முதன்மை அதிகாரி சந்தீப் ரோபேரியா மற்றும் எம்வி துகார் க்ரூப்பின் தலைவர் மோடி லால் துகார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

revolt motors in nepal

காத்மண்டு ஷோரூமை தொடர்ந்து நேபாளத்தில் மேலும் 12 நகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க ரிவோல்ட் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஷோரூம்கள் அனைத்திலும் பைக்கிற்கான பழுது பார்ப்பு சர்வீஸ்களும் வழங்கப்பட உள்ளன. இதற்காக நன்கு அனுபவமிக்க எலக்ட்ரிக் வாகன மெக்கானிக்குகளை நியமிக்க உள்ளதாக ரிவோல்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் பைக்குகளுடன் சேர்த்து அவற்றிற்கான ஆக்ஸஸரீகளையும் ரிவோல்ட் தனது நேபாள ஷோரூம்களில் விற்பனை செய்ய உள்ளது.

எடுத்த உடனே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து எலக்ட்ரிக் பைக்குகளையும் நேபாளத்தில் ரிவோல்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள ரிவோல்ட் ஆர்வி400 (RV400), செயல்திறன் மிகுந்த ஆர்வி400 பி.ஆர்.இசட் (BRZ), விலை குறைவான ஆர்வி1 (RV1) & ஆர்வி1+ மற்றும் ஆற்றல்மிக்க ஆர்வி பிளாஸ் எக்ஸ் (BlazeX) என அனைத்து எலக்ட்ரிக் பைக்குகளையும் நேபாளத்தில் ரிவோல்ட் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகள் அனைத்திலும் பைக்கில் இருந்து நீக்கக்கூடிய ஐபி67 சான்றளிக்கப்பட்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. மேலும், இவற்றில் பொருத்தப்படும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (Regenerative Braking), ரிவர்ஸ் அசிஸ்ட் (Reverse Assist), மொபைல் செயலி உடன் பைக்கை இணைக்கக்கூடிய ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்டவை நேபாள நாட்டின் புவியியல் அமைப்பிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் பைக்குகளுக்கு பரவலாக ஒரு தேவை உலகம் முழுவதும் இருக்கிறது. அதனை பயன்படுத்தியே இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ரிவோல்ட் மோட்டார்ஸ் சென்றுள்ளது. எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய அவற்றிற்கான ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியையும் நேபாளம் நாட்டில் ரிவோல்ட் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் இந்தியாவின் ரிவோல்ட் எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 18, 2025, 15:41 [IST]
English summary
Revolt has officially began operations in nepal with showroom in kathmandu
மேலும்... #revolt #electric bike #bike showroom
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X