ஸ்பிளெண்டர், பிளாட்டினா போல டெய்லி யூஸ்க்கு அடிக்கலாம்.. ரூ.1.14 லட்சத்துக்கு சூப்பரான இ-பைக் அறிமுகம்..

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors). இந்த நிறுவனமே ஓர் விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்கை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆர்வி பிளேஸ் எக்ஸ் (RV BlazeX) எனும் இ-பைக்கையே அந்த நிறுவனம் விற்பனைக்கு நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்சாரத்தில் இயங்கும் பைக்கிற்கு 1 லட்சத்து 14 ஆயிரத்து 990 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த மின்சார பைக்கில் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 3.24 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்-கே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஐபி67 தர சான்று பேட்டரி பேக் ஆகும்.

Revolt rv blazex electric bike launched

எனவே தூசி மற்றும் தண்ணீரால் இந்த பேட்டரி பேக் பாதிக்காது என நம்பலாம். இதேபோல் 4 kW வரையிலான ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே புதிய ஆர்வி பிளேஸ் எக்ஸ் இ-பைக்கில் பயன்படுத்தி இருக்கின்றனர். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும்.

இந்த இ-பைக்கில் மொத்தமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ரிவர்ஸ மோடும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, ரைடர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக இந்த பைக்கில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஸ்க் பிரேக்குடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Revolt rv blazex electric bike side view

இத்துடன், பிரகாசமான ஒளியை வழங்கக் கூடிய எல்இடி லைட்டையே இந்த பைக்கில் வழங்கி இருப்பதாக ரிவோல்ட் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மேலும், சிறப்பான ரைடு அனுபவத்திற்காக இந்த பைக்கின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் வீலில் ட்வின் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

தொடர்ந்து, வழக்கமான மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டுகளில் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ளும் விதமான வசதியும் இந்த பைக்கில் ரிவோல்ட் வழங்கி இருக்கின்றது. வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து இந்த பைக்கை சார்ஜ் செய்கையில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் எட்ட 3.30 மணி நேரங்களும், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் சார்ஜ் செய்கையில் வெறும் 80 நிமிடங்களே தேவைப்படும்.

Revolt rv blazex

சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த பைக் மிகவும் அசத்தலானதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 6 அங்குல எல்சிடி திரையே இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர். 4ஜி இணைப்பு வசதிக் கொண்ட திரையே இதுவாகும். இத்துடன் ஜிபிடி டிராக்கிங் மற்றும் ஓடிஏ அப்டேட் உள்ளிட்ட வசதிகளையும் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தினசரி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் பைக்காகவே ஆர்வி பிளேஸ் எக்ஸ் இ-பைக்கை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. ஆகையால், இந்த வாகனத்தை ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் பஜாஜ் பிளாட்டினாவை போல தினசரி பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2025, 20:51 [IST]
English summary
Revolt motors unveils rv blazex electric bike priced at inr 1 14 lakh for urban commuters
மேலும்... #revolt #new launches #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X