மீண்டும் விற்பனைக்கு வந்திடுச்சா... இந்த டிஸ்பிளே-காகவே எல்லாரும் ஸ்கூட்டரை புக் பண்ண போறாங்க!

ரிவர் (River) நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 'இன்டி ஜென் 3' (Indie Gen 3) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் பெங்களூரில் ரூ.1.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இன்டி ஜென் 3 ஸ்கூட்டரில் மேம்படுத்தப்பட்ட டயர்கள், புதிய டிஸ்ப்ளே மற்றும் நவீன மொபைல் செயலி வசதிகள் உள்ளன. இந்த மொபைல் செயலிகள் மூலம் ஓட்டுநர்கள் வழக்கமான விபரங்கள் உடன் துல்லியமான ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் தகவல்களைப் பெறலாம். மேலும், ரைடிங் புள்ளி விவரங்கள், நிகழ்நேர சார்ஜிங் நிலை மற்றும் கஸ்டமைசேஷன் செய்யக்கூடிய டேட்டா போன்ற புதிய மொபைல் செயலி வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

river indie gen 3 electric scooter launched

புதிய ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் வசதி, மலைப்பாதைகளில் ஸ்கூட்டரை இயக்குவதை எளிதாக்கும். ரைடர்களின் கருத்துகளின் அடிப்படையில், ஸ்கூட்டரின் ரைடிங் டைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 43 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் மற்றும் 12 லிட்டர் க்ளவ் பாக்ஸ் வசதி இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களாகும்.

இன்டி ஜென் 3 ஸ்கூட்டர் ஐந்து வண்ணங்களில், கருப்பு நிற ஹைலைட்கள் உடன் கிடைக்கிறது. முந்தைய ஜென்ரேஷன் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும், புதிய மாடலுக்கும் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, புதிய ஜென் 3 இன்டி ஸ்கூட்டரில் 4 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

river indie gen 3 electric scooter launched

இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 163 கி.மீ. தூரம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரில் 6.7 kW மோட்டார் உள்ளது. இது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இதன் பேட்டரியை வெறும் 5 மணி நேரத்தில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் நிரப்பி விடலாம். பாதுகாப்பான பயணத்திற்காக இந்த ஸ்கூட்டரின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரிவர் நிறுவனம் தனது முதல் டெல்லி டீலர்ஷிப் ஷோரூமை ராஜோரி கார்டனில் 6,300 சதுர அடி பரப்பளவில் திறந்துள்ளது. இது வட இந்தியாவில் ரிவரின் முக்கிய மையமான விற்பனை மையமாகச் செயல்படும். தற்சமயம், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே, கொச்சி, கோவை, பாட்னா மற்றும் ஹூப்ளி உட்பட 34 நகரங்களில் ரிவர் நிறுவனத்திற்கு விற்பனை நிலையங்கள் உள்ளன.

river indie gen 3 electric scooter launched

2026 மார்ச் மாதத்திற்குள் 80 விற்பனை நிலையங்களை திறக்க ரிவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் புதிய ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் தனது வர்த்தகத்தை ரிவர் நிறுவனம் விரிவுப்படுத்த உள்ளது.

"டெல்லி, ரிவர் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். இதன் மூலம் தென் இந்தியாவிற்கு வெளியே எங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறோம்" என்று ரிவர் இவி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் மணி (Aravind Mani) கூறியுள்ளார்.

river indie gen 3 electric scooter launched

அவர் மேலும் கூறுகையில், "நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய ஷோரூம், வட இந்தியாவில் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு மையமாகச் செயல்படும். நீடித்து உழைக்கும், பல்துறை திறன் கொண்ட, மக்கள் சார்ந்த புதுமைகளை இணைக்கும் தயாரிப்புகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரிவர் நிறுவனம் மார்ச் 2025 மாதத்தில் விற்பனையில் 1,800 யூனிட்களைக் கடந்திருந்தது. இது இண்டி இவி-க்கான தேவையின் அதிகரிப்பைக் காட்டுகிறது. புதிய இண்டி ஜென் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதுடன், டெல்லி போன்ற முக்கிய சந்தைகளில் விரிவடைவதன் மூலம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று ரிவர் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது. ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் ரிஸ்டா, ஓலா எஸ்1 புரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் போன்ற பல போட்டி மாடல்கள் சந்தையில் விற்பனையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, October 3, 2025, 10:55 [IST]
English summary
River indie gen 3 electric scooter launched check price new features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X