126 வருஷமா ஒரு பைக் கம்பெனி ரன் ஆகுறதே பெரிய விஷயம்! 2026இல் முதல் எலெக்ட்ரிக் பைக்...
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்திற்கு 2026ஆம் ஆண்டு சமீப கால வரலாற்றிலேயே மிக முக்கியமான ஆண்டாக அமையவுள்ளது. இந்த புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் பிராண்ட் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதுடன், வெற்றிக்கரமாக அதன் 125வது ஆண்டு விழாவையும் கொண்டாடவுள்ளது. அத்துடன், புதிய மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் பைக்குகளையும் அறிமுகப்படுத்தி, உலகளவில் பல புதிய நாடுகளுக்கு தனது விரிவாக்கத்தையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
வரவிருக்கும் ஆண்டிற்கான ராயல் என்பீல்டின் முக்கிய திட்டங்களை இங்கே விரிவாகக் காணலாம். எங்களது கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டு ராயல் என்பீல்டுக்கு ஒரு சரித்திரப் பதிவாக மாறவுள்ளது. ஏனெனில், இந்த நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வெளியிட உள்ளது. 'ஃப்ளையிங் ஃப்ளே எஸ்6' (Flying Flea F6) என்கிற அந்த மாடல் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அன்றாட பயன்பாட்டிற்கான ரெட்ரோ-ஸ்டைல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

பல தசாப்தங்களாக சிறந்த பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களை தயாரித்த ராயல் என்ஃபீல்டு, எலெக்ட்ரிக் வாகன உலகில் தனது முதல் பெரிய அடியை 2026இல் எடுத்து வைக்கவுள்ளது. இந்த மாற்றம், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவில் ராயல் என்ஃபீல்டை ஒரு வலுவான உலகளாவிய சக்தியாக நிலைநிறுத்தக்கூடும். ராயல் என்ஃபீல்டின் கீழ் செயல்படும் துணை பிராண்டாக வரும் ஃபிளையிங் ஃப்ளேவின் இந்த முதல் மாடல், 1940களின் அசல் 'ஃப்ளையிங் ஃப்ளே' பைக்குகளின் பரிணாம வளர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில், குறைவான எடையில் மேம்பட்ட மெக்னீசியம் பேட்டரி கேசிங் மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய வட்ட வடிவ 3.5 அங்குல TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரைடு மோட்கள், தரையில் இருந்து அதிக உயரத்தில் பைக்கின் அடிப்பகுதி (Ground clearance), என்டூரோ ரக பைக்குகளில் இருப்பதை போன்ற இருக்கைகள் மற்றும் சவுகரியமான ஹேண்ட்லிங்கிற்காக தட்டையான ஹேண்டில்பார்கள் போன்ற அம்சங்களை இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகத்துடன், 2026ஆம் ஆண்டில் ராயல் என்பீல்டு தனது 125வது ஆண்டு பயணத்தையும் கொண்டாடவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தனது அனைத்து பைக்குகளிலும் ஸ்பெஷல் எடிசன்களை வெளியிட ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே, சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் கிளாசிக் 650 (Classic 650) பைக்கின் 125வது ஆண்டு பதிப்பை ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு காட்சிப்படுத்தி விட்டது.
எனவே, 350சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உட்பட பிற மோட்டார்சைக்கிள் வகைகளிலும் இதேபோன்ற ஸ்பெஷல் எடிசன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த சிறப்புப் பதிப்புகள், தனித்துவமான பிரீமியம் பெயிண்ட் ஆப்ஷன்கள் மற்றும் பெட்ரோல் டேங்க் & பாடி பேனல்களில் பிரத்யேக 125வது ஆண்டு விழா லோகோக்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், என்ஜின் பாகங்களில் மாற்றம் இருக்காது.
இவற்றுடன், புல்லட் 650 (Bullet 650), ஹிமாலயன் 750 (Himalayan 750) மற்றும் கான்டினென்டல் ஜிடி750 (Continental GT750) போன்ற விலையுயர்ந்த பிரீமியம் பைக்குகளையும் அறிமுகப்படுத்தி, பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இதற்கான புதிய 750சிசி பைக் பிளாட்ஃபார்ம் 2026இல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது முக்கியமாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ந்த உலகளாவிய சந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது. வரவிருக்கும் இந்த 750சிசி பிளாட்ஃபார்ம் தற்போதைய 650 பிளாட்ஃபார்மின் இடத்தை மாற்றுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. எனினும், ஹிமாலயன் 750 (Himalayan 750) அட்வென்ச்சர் பைக்கில் தொடங்கி, அடுத்த சில ஆண்டுகளில் பல புதிய 750சிசி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. 2026இல், இந்த பிராண்ட் மேலும் விரிவாக்கத்தைக் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து சிகேடி (CKD) (பாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி) அலகுகளாக கப்பலில் அனுப்பப்பட்டு, செலவுகளைக் குறைக்கவும், வாடிக்கையாளர்கள் அணுகல்தன்மையை மேம்படுத்தவும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாகங்களை முழு பைக்காக அசெம்பிள் செய்வதற்காக பல வெளிநாட்டு அசெம்பிளி ஆலைகளுக்கும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது, ராயல் என்பீல்டு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வலுவான டீலர் மற்றும் விநியோக நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. உலகின் முன்னணி ரெட்ரோ வகை மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுவனங்களுள் ஒன்றாக, ராயல் என்ஃபீல்டு 2026இல் அதன் சர்வதேச வரம்பை விரிவுப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









