வரலாறு காணாத குறைவான விலையில் களமிறங்கும் ராயல் என்பீல்டு பைக்! மொத்த மார்க்கெட்டையும் மிரள விட போகுது!
இந்தியாவை சேர்ந்த பலருக்கும், ராயல் என்பீல்டு பைக்குகளை (Royal Enfield Bikes) வாங்க வேண்டும் என்ற ஆசை, கண்டிப்பாக இருக்கும். ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகளின் விலை (Price) சற்று அதிகம். மறுபக்கம் ராயல் என்பீல்டு பைக்குகளின் மைலேஜ் (Mileage) அவ்வளவு சிறப்பாக இருக்காது.
இந்த 2 காரணங்களால், ராயல் என்பீல்டு பைக் கனவை நிறைவேற்றி கொள்ள முடியாமல் பலரும் தவிக்கின்றனர். விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய வேறு ஏதாவது ஒரு பைக்கை வாங்கி திருப்தியடைந்து கொள்ள வேண்டிய சூழலில் அவர்கள் இருக்கின்றனர்.

இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய புத்தம் புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இது, ஹைப்ரிட் பைக் (Royal Enfield Hybrid Bike) ஆகும். எனவே ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் எந்தவொரு ராயல் என்பீல்டு பைக்கும் இவ்வளவு மைலேஜ் வழங்குவதில்லை.

எனவே அதிக மைலேஜ் வழங்கும் ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை இது பெறவுள்ளது. இந்த பைக்கில் வழங்கப்படவிருப்பது 250 சிசி இன்ஜின் ஆகும். சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ (CFMoto) நிறுவனத்திடம் இருந்து இந்த இன்ஜின் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு மற்றும் சிஎஃப் மோட்டோ நிறுவன உயர் அதிகாரிகள் இதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஜின் மட்டுமே சிஎஃப் மோட்டோ நிறுவனத்துடையதாக இருக்கும். இன்ஜின் தவிர, டிசைன், வசதிகள், சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஸன் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் ராயல் என்பீல்டு கவனித்து கொள்ளும்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லைன்-அப்பில் அதிக மைலேஜ் வழங்கும் பைக் என்ற பெருமையை மட்டுமல்லாது, மிகவும் விலை குறைவான பைக் என்ற பெருமையையும், இந்த புதிய பைக் சேர்த்தே பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை குறைவான பைக்காக இருப்பது ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகும்.
இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) வெறும் 1.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் களமிறக்கவுள்ள புதிய 250 சிசி ஹைப்ரிட் பைக்கின் விலை இதைக்காட்டிலும் குறைவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1.20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில், மிகவும் விலை குறைவானதாக இது இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த ராயல் என்பீல்டு 250 சிசி ஹைப்ரிட் பைக், அனேகமாக 2026ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
100சிசி - 150சிசி பைக்குகளில் இருந்து, முதல் முறையாக பிரீமியம் பைக்கிற்கு மாறும் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு, இந்த புதிய 250 சிசி ஹைப்ரிட் பைக்கை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக்கின் வருகைக்கு பின், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








