ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கும் கனவை நிஜமாக்கும் நேரம் வந்தாச்சு! எப்போதில் இருந்து புக் செய்யனும்?
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பைக்குகளை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனம். இந்த நிலையில், மற்ற நிறுவனங்களை போன்று, ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் தனது பைக்குகளின் விலைகளில் ஜிஎஸ்டி 2.0 மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதன்படி, சில பைக்குகளின் விலைகள் குறைந்துள்ள நிலையில், சிலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. மத்திய அரசு 350சிசி-க்கு அதிகமான பைக்குகளுக்கு ஜிஎஸ்டி வரியை 40% ஆக உயர்த்தியதே இந்த மாற்றங்களுக்குக் காரணமாகும். புதிய விலைகள் வருகிற செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) பைக்கிற்கு அதிகபட்சமாக ரூ.19,665 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பழைய எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.2.37 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.2.17 லட்சமாக குறைந்துள்ளது. அதேசமயம், சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650) பைக்கின் விலை அதிகபட்சமாக ரூ.29,486 வரை உயர்ந்துள்ளது.
இதன் பழைய விலை ரூ.3.71 லட்சத்திலிருந்து புதிய விலை ரூ.3.98 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்சமயம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Hunter 350) பைக்கின் பழைய விலை ரூ.1.49 லட்சம் ஆகும். இது தற்போது ஜிஎஸ்டி 2.0 மாற்றத்தினால் ரூ.1.37 லட்சமாக குறைந்துள்ளது.

புல்லட் 350 (Bullet 350) பைக்கின் பழைய விலை ரூ.1.76 லட்சமாக இருந்தது, புதிய விலை ரூ.1.62 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளாசிக் 350 (Classic 350) பைக்கின் விலை ரூ.1.97 லட்சத்திலிருந்து ரூ.1.81 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. மீட்டியோர் 350 (Meteor 350) பைக்கின் பழைய விலை ரூ.2.08 லட்சத்தில் இருந்து ₹1.91 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஸ்க்ராம் 450 (Scram 450) பைக்கின் விலை ரூ.2.08 லட்சத்திலிருந்து ரூ.2.23 லட்சமாக உயர்ந்துள்ளது. குரில்லா 450 (Guerrilla 450) பைக்கின் விலை ரூ.2.39 லட்சத்திலிருந்து ரூ.2.56 லட்சமாக அதிகரித்துள்ளது. ஹிமாலயன் 450 (Himalayan 450) பைக்கின் விலை ரூ.2.85 லட்சத்திலிருந்து ரூ.3.05 லட்சமாக உயர்ந்துள்ளது.

இன்டர்செப்டர் 650 (Interceptor 650) பைக்கின் பழைய விலை ரூ.3.09 லட்சமாக இருந்தது. தற்போது இது ரூ.3.32 லட்சமாக உயர்ந்துள்ளது. கான்டினென்டல் ஜிடி பைக்கின் விலை ரூ.3.25 லட்சத்திலிருந்து ரூ.3.49 லட்சமாக அதிகரித்துள்ளது. கிளாசிக் 650 பைக்கின் விலை ரூ.3.36 லட்சத்திலிருந்து ரூ.3.61 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஷாட்கன் 650 (Shotgun 650) பைக்கின் விலை ரூ.3.67 லட்சத்திலிருந்து ரூ.3.94 லட்சமாக அதிகரித்துள்ளது. இறுதியாக, பியர் 650 (Bear 650) பைக்கின் பழைய விலை ரூ.3.46 லட்சமாக இருந்தது, இது ரூ.3.71 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த விலை மாற்றங்கள் ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு பைக்குகளில் சாதகமாகவும் பாதகமாகவும் அமைகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு இந்த விலை குறைப்பு முக்கிய பங்களிப்பாக இருக்கும். ஏனெனில், ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரது கனவாக உள்ளது. ஆனால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் அதிக விலையை கருத்தில் கொண்டு அவற்றை வாங்குவதை சிலர் தவிர்க்கின்றனர். செப்.22 முதல் அத்தகையவர்களும் எளிதாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









