ராயல் என்ஃபீல்டு பைக் கனவை நிஜமாக்க நேரம் வந்துடுச்சு! இதை விட்டால் சரியான சான்ஸ் கிடைக்காது!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், தனது மோட்டார்சைக்கிள்கள், சேவைகள், ஆடை மற்றும் ஆக்ஸஸரீஸ் (Accessories) பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனங்களுள் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு இந்தியாவை தாண்டி உலகளவிலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிரிட்டிஷ் நாட்டில் தோன்றியிருந்தாலும், நீண்ட காலமாகவே சென்னை தான் ராயல் என்ஃபீல்டின் தலைமையகமாக உள்ளது.

royal enfield bikes prices cut

சென்னையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து மாதந்தோறும் பல ஆயிரக்கணக்கிலான பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வரும் நிலையில், மற்ற பைக் நிறுவனங்களை போன்று மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி திருத்தத்திற்கு ஏற்ப தனது பைக்குகளின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்த விலை குறைப்பு, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நடப்பு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களைத் தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்படி சில ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலைகள் குறைய உள்ளன. அதேநேரம், சில பைக்குகளின் விலைகள் அதிகரிக்க உள்ளன.

royal enfield bikes prices cut

ஏனெனில், ஜிஎஸ்டி திருத்தப்படி பைக்குகளுக்கான ஜிஎஸ்டி ஆனது இரு பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, 350சிசி மற்றும் அதற்கு கீழான சிசி என்ஜினை கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி ஆனது 28%-இல் இருந்து 18% ஆக குறைக்கப்படுகிறது. அதேநேரம், 350சிசி-க்கும் மேல் சிசி என்ஜின் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி 31%-இல் இருந்து 40% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதனால், ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் 350 (Hunter 350), புல்லட் 350 (Bullet 350), கிளாசிக் 350 (Classic 350), கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) உள்ளிட்ட 350சிசி வகை பைக்குகளின் விலை குறையும் என்றும், 350சிசி-க்கு மேல் உள்ள மற்ற மோட்டார்சைக்கிள்களின் விலைகள் புதிய ஜிஎஸ்டி விகிதங்களுக்கு ஏற்ப மாறும்.

royal enfield bikes prices cut

இதனால், மக்கள் அதிக எண்ணிக்கையில் வரவேற்பை பெற்றுவரும் ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் எளிதாகக் கிடைக்கும் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்து இருந்தாலும், மற்ற பிரபலமான ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளின் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

ஈச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ராயல் என்பீல்டின் தலைமைச் செயல் அதிகாரியுமான பி. கோவிந்தராஜன் கூறுகையில், "இந்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தம் 350சிசி-க்கு கீழ் உள்ள மோட்டார்சைக்கிள்களை எளிதாகக் கிடைக்கச் செய்வதுடன், முதல் முறையாக ராயல் என்ஃபீல்டு பைக் வாங்குவோரையும் உற்சாகப்படுத்தும்.

royal enfield bikes prices cut

விலை மாற்றத்தின் முழு ஜிஎஸ்டி பலனையும் எங்கள் நுகர்வோருக்கு நேரடியாக வழங்குவதில் ராயல் என்பீல்டு மகிழ்ச்சி அடைகிறது" என்றார். இந்த நடவடிக்கை இரு சக்கர வாகனத் துறையில் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். 350சிசி பைக்குகள் ராயல் என்பீல்டின் விற்பனையில் முக்கிய அங்கமாக நீண்ட காலமாக இருந்து வருகின்றன. திருத்தப்பட்ட விலை அதிகமானோரை ஈர்க்கும் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எதிர்பார்க்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அதிக சிசி என்ஜின் உடன் உருவாக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், அந்த விலை கூட நம்மில் பலருக்கு அதிகமானதாக உள்ளது. இதனாலேயே ஏழை, எளிய மக்கள் பலரால் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்க முடிவதில்லை. இந்த நிலையில், செப்.22 முதல் கொண்டுவரப்படும் விலை குறைப்பானது இன்னும் பலரை ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகளை வாங்க ஊக்கப்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 12, 2025, 10:49 [IST]
English summary
Royal enfield announces price cut for its motorcycles due to gst 2 point zero
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X