டூ-வீலர் மார்கெட்டில் ராயல் என்பீல்டு கொடி பறக்குது.. போன வருஷ ஏப்ரலுக்கு இந்த வருஷ ஏப்ரல் எவ்வளவோ மேல்!

இந்தியர்களின் ஃபேவரிட் பைக் பிராண்டுகளில் ஒன்றாக ராயல் என்பீல்டு நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் மிகவும் சிறந்த மாதமாக அமைந்திருக்கின்றது. ஏப்ரல் 2024இல் காணாத விற்பனையை ராயல் என்பீல்டு நிறுவனம் 2025 ஏப்ரலில் கண்டிருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையில் அந்நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

எண்களின் அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் 2024 ஏப்ரல் மாதத்தில் 82 ஆயிரத்து 043 யூனிட்டுகளாக மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை, 2025 ஏப்ரலில் 86 ஆயிரத்து 559 யூனிட்டுகளாக உயர்ந்து இருக்கின்றது. இது சுமார் 6 சதவீத விற்பனை வளர்ச்சி ஆகும்.

Royal enfield april 2025 sales increase 6 percent

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது மற்றும் உள்நாட்டில் விற்பனையானது இரண்டிலும் சேர்த்து பெற்ற எண்ணிக்கையே இது ஆகும். கடந்த ஏப்ரலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான டிமாண்ட் உள்நாடு மற்றும் வெளிநாடு இரண்டிலும் அதிகரித்திருக்கின்றது. இதை வெளிக்காட்டும் விதமாகவே தற்போது வெளியாகி இருக்கும் சேல்ஸ் ரிப்போர்ட்டும் அமைந்திருக்கின்றது.

விரிவாக சொல்ல வேண்டும் முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் மட்டும் 75,038 யூனிட்டுகள் ராயல் என்பீல்டு டூ-வீலர்கள் விற்பனையாகின. அதுவே இந்த ஆண்டு ஏப்ரலில் அது 76,002 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது. இது 1 சதவீதம் அதிகம் விற்பனையாகும். அதேநேரத்தில் உலக சந்தையில் 55 சதவீதம் அதிகம் வரவேற்பைப் பெற்று ராயல் என்பீல்டு பைக்குகள் பெற்றிருக்கின்றன.

10 ஆயிரம் 557 யூனிட்டுகள் இரண்டு சக்கர வாகனங்களையே 2025 ஏப்ரலில் உலக சந்தைகளுக்காக சென்னை உற்பத்தி ஆலையில் இருந்து அனுப்பி வைத்திருக்கின்றது. இந்த வளர்ச்சியே நிறுவனத்தின் டூ-வீலர்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல தேவை அதிகரித்து இருக்கின்றது என்பதை வெளிக்காட்டும் விதமாக அமைந்து உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இந்த விற்பனை வளர்ச்சியை மகிழ்ச்சியை வழங்கினாலும், மறுபக்கம் இது சற்றே வேதனை அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றது. ஏனெனில் இது 2025 மார்ச் மாதத்தைக் காட்டிலும் குறைவான விற்பனை ஆகும். 2025 மார்ச் மாதத்தில் நிறுவனத்தின் தயாரிப்பு 1.01 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகின.

இதைவிட 14.32 சதவீதம் குறைவான விற்பனையையே இப்போது அந்நிறுவனம் அது பெற்றிருக்கின்றது. இதுவே அவர்களுக்கு வேதனையளிக்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றது. விரைவில் இந்த விற்பனை வீழ்ச்சியில் ராயல் என்பீல்டு மீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப புதிய தயாரிப்புகள் சிலவற்றை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் ராயல் என்பீல்டு நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் இப்போதைய நிலவரப்படி ஐசிஇ எஞ்சின் கொண்ட டூ-வீலர்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விரைவில் அது மின்சார டூ-வீலர்களையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஃபிளையிங் ஃப்ளியா இதுவே நிறுவனத்தின் முதல் இ-பைக்காக இருக்கும் என பலரால் நம்பப்படுகின்றது. இது, இந்த ஆண்டின் இறுதிக்குள் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்றும் நம்புகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 2, 2025, 10:41 [IST]
English summary
Royal enfield april 2025 sales increase by 6 percent to 86559 units despite month on month decline
மேலும்... #royal enfield #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+