ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை இந்த சென்னை பைக் கம்பெனி சரியா யூஸ் பண்ணியிருக்கு! விற்பனை 1 லட்சத்தை தாண்டியாச்சு!

2025 செப்டம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், முந்தைய 2024ஆம் ஆண்டின் இதே செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024 செப்டம்பர் மாதத்துடன் மட்டுமின்றி, கிளாசிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு முந்தைய 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது.

சமீபத்தில் 350சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலையில் பெரும் குறைப்பு செய்யப்பட்டாலும், 440சிசி, 450சிசி மற்றும் 650சிசி பைக்குகளின் விலைகளில் அதற்கு நேர்மாறாக விலை அதிகரிப்பு கொண்டுவரப்பட்டது. கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த பைக் விற்பனை 1,13,573 யூனிட்களை எட்டியுள்ளது.

royal enfield bike-wise september sales report
No Royal Enfield Sep-25 Sep-24 Diff Growth % YoY % Share Aug 25
1 Classic 350 40,449 33,065 7,384 22.33 35.61
2 Bullet 350 25,915 12,901 13,014 100.88 22.82
3 Hunter 350 21,801 17,406 4,395 25.25 19.20
4 Meteor 350 14,435 8,665 5,770 66.59 12.71
5 Himalayan 3,939 1,814 2,125 117.14 3.47
6 650 Twin 3,856 2,869 987 34.40 3.40
7 Guerrilla 1,798 1,657 141 8.51 1.58
8 Super Meteor 1,101 685 416 60.73 0.97
9 Shotgun 279 264 15 5.68 0.25
- Total 1,13,573 79,326 34,247 43.17 100.00

இது 2024 செப்டம்பரில் விற்கப்பட்ட 79,326 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க 43.17% வளர்ச்சியைக் காட்டுகிறது. அதேபோல், ராயல் என்ஃபீல்டின் 2025 ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையிலும் 2025 செப்டம்பரில் விற்பனையில் 10.4% வளர்ச்சியை ராயல் என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது. ஏனெனில், 2025 ஆகஸ்ட் மாதத்தில் 1,02,876 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.

No Royal Enfield Sep-25 Aug-25 Diff Growth % MoM % Share Aug 25
1 Classic 350 40,449 36,025 4,424 12.28 35.02
2 Bullet 350 25,915 24,188 1,727 7.14 23.51
3 Hunter 350 21,801 23,298 -1,497 -6.43 22.65
4 Meteor 350 14,435 8,957 5,478 61.16 8.71
5 Himalayan 3,939 2,836 1,103 38.89 2.76
6 650 Twin 3,856 4,057 -201 -4.95 3.94
7 Guerrilla 450 1,798 1,781 17 0.95 1.73
8 Super Meteor 1,101 1,466 -365 -24.90 1.43
9 Shotgun 279 268 11 4.10 0.26
- Total 1,13,573 1,02,876 10,697 10.40 100.00

கடந்த மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் விற்பனையில் இந்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்த மாடல்களில் கிளாசிக் 350 முதலிடத்தில் உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 40,449 யூனிட்கள் விற்பனையாகி, 2024 செப்டம்பரை விட 22.33% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கடுத்து, புல்லட் 350 பைக் 25,915 யூனிட்கள் விற்பனையுடன் அசாதாரணமான 100.88% வளர்ச்சியை எட்டியுள்ளது.

royal enfield bike-wise september sales report

ராயல் என்ஃபீல்டின் கடந்த மாத மொத்த பைக்குகள் விற்பனையில் கிளாசிக் 350 பைக் 35.61% பங்கையும், புல்லட் 350 பைக் 22.82% பங்கையும் வகித்துள்ளன. அதாவது, கடந்த மாதத்தில் வாங்கப்பட்ட மூன்றில் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் கிளாசிக் 350 ஆகும். இந்த வரிசையில் 3வது இடத்தில் ஹண்டர் 350 பைக் 21,801 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. ஹண்டரின் இந்த எண்ணிக்கை ஆனது 2024 செப்டம்பரை விட 25.25% அதிகமாகும்.

இதற்கு அடுத்து, மீட்டியோர் 350 பைக் 14,435 யூனிட்கள் விற்பனையாகி 2024 செப்டம்பரை விட 66.59% வளர்ச்சியுடன், ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனையில் 12.71% பங்களித்துள்ளது. 350சிசி-க்கு மேல் என்ஜினை கொண்டிருப்பதன் காரணமாக, ஜிஎஸ்டி அதிகரிப்பை பெற்றிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் 3,939 யூனிட்கள் விற்பனையுடன் ஈர்க்கக்கூடிய 117.14% வளர்ச்சியை 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் அடைந்துள்ளது.

royal enfield bike-wise september sales report

ஹிமாலயனுக்கு அடுத்து 650 ட்வின்ஸ் பைக்குகள் 3,856 யூனிட்கள் விற்பனையுடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன. இவை கடந்த ஆண்டு செப்டம்பரை காட்டிலும் விற்பனையில் 34.40% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ராயல் என்ஃபீல்டு கரில்லா 450 பைக் 1,798 யூனிட்கள் விற்பனையுடன் இந்த வரிசையில் 7வது இடத்தில் உள்ளது.

மேலும், கடந்த மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் 2,000 யூனிட்களுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களுள் முதன்மையானதாக கரில்லா 450 விளங்குகிறது. இவற்றுடன், கடந்த மாதத்தில் 1,101 சூப்பர் மீட்டியோர் 650 பைக்குகளையும், 279 ஷூட்கன் 650 பைக்குகளையும் ராயல் என்ஃபீல்டு விற்றுள்ளது. இந்த இரு பைக்குகளும் 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

royal enfield bike-wise september sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த செப்டம்பர் மாதத்தில் பெரும்பாலான பைக்குகளின் விற்பனை வளர்ச்சி கண்டிருப்பது, மோட்டார்சைக்கிள் சந்தையில் ராயல் என்ஃபீல்டின் வலுவான நிலையையும், வாடிக்கையாளர்களின் தேவையையும் காட்டுகிறது. இது வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் முதல்முறையாக ஒரு மாதத்தில் பைக்குகள் விற்பனையில் 1 லட்சம் என்கிற இமாலய எண்ணிக்கையை அடைந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று 1.13 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 25, 2025, 22:44 [IST]
English summary
Royal enfield bike wise sales report of september 2025 classic bullet and hunter 350
மேலும்... #royal enfield #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X