ராயல் என்ஃபீல்டின் சென்னை ஆலை ஓய்வில்லாமல் ஓடுது! எவ்வளவு விலை நிர்ணயித்தாலும் வாங்க ஆள் இருக்கு

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இங்கிலாந்தில் உருவாகி தற்போது நம் சென்னையில் தலைமையகத்தையும், தொழிற்சாலையையும் கொண்டு செயல்பட்டுவரும் உலகளவில் முன்னணி பைக் நிறுவனம். இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் கோலோச்சி வரும் மிகவும் சில இந்திய பைக் நிறுவனங்களுள் ராயல் என்ஃபீல்டு ஒன்றாகும். இத்தகைய நிறுவனத்தில் இருந்து நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரங்கள் பைக் வாரியாக வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் விற்பனை ஆனது மாதத்திற்கு மாதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2024 ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ராயல் என்ஃபீல்டு பைக்குகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

royal enfield bikes sales report

கடந்த 2025 ஜனவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ள பைக்குகளின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 52 ஆகும். அதுவே, 2024 ஜனவரியில் 70 ஆயிரத்து 556 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதுவாவது பரவாயில்லை, கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் வெறும் 67 ஆயிரத்து 891 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட பைக் மாடலாக வழக்கம்போல் முதலிடத்தை கிளாசிக் 350 பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 582 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கும் 3இல் ஒருவர் நிச்சயமாக தேர்வு செய்வது கிளாசிக் 350 பைக்காக உள்ளது.

royal enfield bikes sales report

கடந்த 2024 ஜனவரியில் வெறும் 28 ஆயிரத்து 13 கிளாசிக் 350 பைக்குகளும், டிசம்பரில் 29,637 கிளாசிக் 350 பைக்குகளும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கிளாசிக் 350-க்கு அடுத்து கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக பேர் தேர்வு செய்த ராயல் என்ஃபீல்டு பைக்காக 2வது இடத்தில் புல்லட் 350 உள்ளது. கடந்த மாதத்தில் 19 ஆயிரத்து 163 புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2024 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் 14,000- 15,000 என்கிற எண்ணிக்கையிலான புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ராயல் என்ஃபீல்டில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்படும் 3வது பைக்காக ஹண்டர் 350 விளங்குகிறது. கடந்த மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 914 ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

royal enfield bikes sales report

அதுவே, 2024 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏறக்குறைய 18 ஆயிரம் ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ராயல் என்ஃபீல்டின் விலைமிக்க 350சிசி பைக்கான மீட்டியோர் 350 இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 8 ஆயிரத்து 373 மீட்டியோர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இல்லாமல், 650சிசி பைக்குகள் மற்றும் ஹிமாலயன் 450 பைக்குகளையும் கடந்த மாதத்தில் கணிசமான எண்ணிக்கையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால், வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் விற்பனை ஆனது மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2025, 8:00 [IST]
English summary
Royal enfield bikes sales report 2025 january
மேலும்... #royal enfield #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X