ஒரே மாதத்தில் மக்கள் உஷார் ஆகிட்டாங்களா!! ராயல் என்ஃபீல்டு பைக் வாங்க வருவோரின் எண்ணிக்கை கம்மி ஆகிடுச்சு!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இங்கிலாந்தில் தோன்றி தற்சமயம் இந்திய பைக் நிறுவனமாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரலில் சுமார் 12 ஆயிரம் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்சமயம் எத்தனை ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன? அவை ஒவ்வொன்றும் கடந்த ஏப்ரல் மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னையில் தொழிற்சாலைகளை அமைத்து செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 70 ஆயிரத்து இரண்டு பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமே. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் எண்ணிக்கை தனி கணக்கு.

royal enfield bikes sales report

இந்தியாவில் மட்டும் ஒரே மாதத்தில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளதா என ஆச்சிரியப்பட வேண்டாம். ஏனென்றால், கடந்த 2025 மார்ச் மாதத்தில் சுமார் 88 ஆயிரத்து 50 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு உள்நாட்டில் விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை ஆனது 12 ஆயிரத்து 48 பைக்குகள் குறைந்துள்ளது.

ஆனால் மறுப்பக்கம், கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 964 பைக்குகள் அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 75 ஆயிரத்து 38 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. வழக்கம்போல், கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்காக முதலிடத்தை கிளாசிக் 350 (Classic 350) பிடித்துள்ளது.

royal enfield bikes sales report

கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கிளாசிக் 350 பைக்குகளின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 801 ஆகும். அதுவே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 29 ஆயிரத்து 476 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 9.08%, அதாவது 2,675 யூனிட்கள் குறைந்துள்ளது.

2024 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் அதிகமாக, கடந்த 2025 மார்ச் மாதத்தில் 33 ஆயிரத்து 115 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் 6,314 கிளாசிக் 350 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிளாசிக் 350 பைக்கிற்கு அடுத்து 2வது இடத்தில் ஹண்டர் 350 (Hunter 350) 18 ஆயிரத்து 109 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

royal enfield bikes sales report

எடை குறைவான பைக்காக கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ராயல் என்ஃபீல்டு பைக் ஹண்டர் 350 ஆரம்பத்தில் கிளாசிக் 350 பைக்கை விற்பனையில் முந்தியது. ஆனால், கடந்த பல மாதங்களாகவே ஹண்டர் 350 பைக்குகளின் விற்பனை அப்படியே தான் உள்ளது. வழக்கத்தை காட்டிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏறக்குறைய ஆயிரம் ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹண்டர் பைக்கிற்கு அடுத்து 3வது இடத்தில் புல்லட் 350 உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட புல்லட் 350 பைக்குகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 489 ஆகும். இதற்கடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் மீட்டியோர் 350 மற்றும் 650 ட்வின்ஸ் பைக்குகள் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 7,644 மற்றும் 3,127 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், 1,715 ஹிமாலயன் பைக்குகள், 968 சூப்பர் மீட்டியோர் பைக்குகள், 920 குரில்லா பைக்குகள் மற்றும் 229 ஷூட்கன் பைக்குகளையும் ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. மார்ச் மாதத்தை காட்டிலும் கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளின் விற்பனை குறைந்திருப்பினும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் விலையுயர்ந்த பைக்குகளான ஹிமாலயன் 450, குரில்லா 450 மற்றும் ஷூட்கன் 650 உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்திருப்பது ராயல் என்ஃபீல்டுக்கு ஆறுதலாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2025, 5:00 [IST]
English summary
Royal enfield bikes sales report of april 2025 check all details here
மேலும்... #royal enfield #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X