நடக்க கூடாதது நடந்துருச்சு! மக்களின் தலையில் இடியை இறக்கிய ராயல் என்பீல்டு! திடீர்னு இப்படி பண்ணீட்டாங்களே!

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் ஏராளமான பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில், ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) மிகவும் முக்கியமானது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக்குகளில் ஒன்றாக புல்லட் 350 திகழ்கிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புல்லட் என்ற பெயருக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பே இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில், சக்தி வாய்ந்த 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Royal Enfield Bullet 350

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் மற்றும் பின் பகுதிகளில் முறையே 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியையும் ராயல் என்பீல்டு புல்லட் 350 கொண்டுள்ளது. இந்த சூழலில், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விலை உயர்வு (Price Hike) பற்றிய செய்தி ஆகும்.

Royal Enfield Hunter 350

ஆம், ராயல் என்பீல்டு நிறுவனம் புல்லட் 350 பைக்கின் விலை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த பைக்கின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விலை, கலர் ஆப்ஷன்களை (Colour Options) பொறுத்து மாறுபடும்.

இதன்படி பட்டாலியன் பிளாக் கலர் ஆப்ஷனின் விலை 1.75 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிலிட்டரி ரெட் மற்றும் மிலிட்டரி பிளாக் கலர் ஆப்ஷன்களின் விலை 1.76 லட்ச ரூபாய் ஆக உள்ளது. மறுபக்கம் ஸ்டாண்டர்டு பிளாக் மற்றும் ஸ்டாண்டர்டு மெரூன் கலர் ஆப்ஷன்கின் விலை 2 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிளாக் கோல்டு ஆப்ஷனின் விலை 2.18 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. இவைதான் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த திடீர் விலை உயர்வு, ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை உயர்வு காரணமாக, ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விற்பனை பாதிக்கப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதுதான் எங்கள் கருத்து. ஏனெனில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதை சிறிய அளவிலான விலை உயர்வாகவே கருதுவார்கள்.

ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் மற்ற விஷயங்களை பொறுத்தவரை, இதில் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. உகந்த சூழல்களில் இந்த பைக்கில் ஒரு லிட்டருக்கு 36.20 கிலோ மீட்டர் மைஜேஜை (Mileage) எதிர்பார்க்கலாம் என ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 (Hunter 350) மற்றும் கிளாசிக் 350 (Classic 350) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், புல்லட் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 17, 2025, 18:45 [IST]
English summary
Royal enfield bullet 350 price hike check all details here
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+