இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா! அப்ப கிளாசிக் 350 வாங்கறதுக்கு பதிலா இதை வாங்கலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 20,547 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய மாதம், அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 25,560 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Royal Enfield Bullet 350

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த நவம்பர் மாதத்தில், 5,013 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக், விற்பனையில் 19.61 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஆனால் வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக், விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 16,193 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 20,547 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Royal Enfield Classic 350

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 4,354 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், 26.89 சதவீத வளர்ச்சியை, ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1,62,161 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 2,02,409 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.

உகந்த சூழல்களில், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கிடம் இருந்து, ஒரு லிட்டருக்கு 36.20 கிலோ மீட்டர் மைலேஜை எதிர்பார்க்க முடியும் என ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது அதிக எடை கொண்ட பைக் ஆகும். இந்த பைக்கின் எடை 195 கிலோ என ராயல் என்பீல்டு நிறுவனம் கூறியுள்ளது.

எனவே ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கை கையாள்வது சற்று கடினமான விஷயமாக இருக்கலாம். புதிதாக ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கை வாங்க முடிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள், இதைப்பற்றி யோசித்து முடிவு செய்து கொள்வது நல்லது. மற்றபடி இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு ராயல் என்பீல்டு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, புல்லட் 350 மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) போன்ற பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 31, 2025, 13:23 [IST]
English summary
Royal enfield bullet 350 sales report november 2025 26 89 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+