ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விலை இப்ப இவ்ளோதானா! அதான் இவ்ளோ அதிகமாக சேல்ஸ் ஆயிட்டு இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 46,573 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 38,297 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 8,276 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 21.61 சதவீத வளர்ச்சி ஆகும்.

Royal Enfield Classic 350

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles October 2025), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் ரைடர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா ஆகியவை உள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1.81 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 2.16 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Royal Enfield Bullet 350

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், 349 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 13 லிட்டர்களாக இருக்கிறது. அதே நேரத்தில் 90 சதவீத எரிபொருள் மற்றும் ஆயில் பைக்கில் இருக்கும் நிலையில் இதன் எடை 195 கிலோவாக இருக்கிறது. மறுபக்கம் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ ஆக உள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் பிரேக்கிங்கை பொறுத்தவரையில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் இந்த பைக்கில், எமரால்டு, ஸ்டீல்த் பிளாக், கன் க்ரே, கமாண்டோ சாண்ட், மெடாலியன் ப்ரோன்ஸ், ஜோத்பூர் ப்ளூ மற்றும் மெட்ராஸ் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350, ராயல் என்பீல்டு புல்லட் 350, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 போன்ற பைக்குகளுக்கு எல்லாம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 27, 2025, 23:58 [IST]
English summary
Royal enfield classic 350 sales report 21 61 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+