ஊரே இந்த ராயல் என்பீல்டு பைக் மேல பைத்தியமா இருக்கு! விலை உண்மையாவே இவ்ளோதானா!
இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு (Royal Enfield Bikes) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கிற்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 29,172 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 24,803 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 4,369 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 17.61 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes June 2025), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், 6வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலின் முதல் 5 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஷைன் (Honda Shine), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe), பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache) ஆகிய பைக்குகள் உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1,97,253 ரூபாயாக உள்ளது. இது ரெட்டிச் ரெட் கலர் ஆப்ஷனின் விலை ஆகும். அதே நேரத்தில் டாப் மாடலான எமரால்டு கலர் ஆப்ஷனின் விலை 2,34,972 ரூபாயாக இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் ரெட்ரோ லுக் கொண்டதாக இருந்தாலும் கூட, தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ற வகையில், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், எலஇடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், சிங்கிள் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்ரிப்பர் நேவிகேஷன் என ஏராளமான அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், சக்தி வாய்ந்த இன்ஜின் மற்றும் சரியான விலை நிர்ணயம் ஆகிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை, இந்திய சந்தையில் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், வரும் காலங்களிலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தொடர்ச்சியாக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் என நாங்கள் கருதுகிறோம். ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) போன்ற பைக்குகளுக்கு இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.


Click it and Unblock the Notifications








