மிடில்-க்ளாஸ் மக்களுக்குனே இந்த ராயல் என்பீல்டு பைக்கை உருவாக்கி இருக்காங்க... விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பதிவு செய்து வருகிறது.
இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய தவறவில்லை. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், 28,628 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles May 2025) ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், 7வது இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியையும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பதிவு செய்துள்ளது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், 23,779 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 20.39 சதவீத வளர்ச்சி ஆகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ரெடிட்ச் ரெட் கலர் ஆப்ஷனின் விலை 1.95 லட்ச ரூபாயாக உள்ளது. இதுதான் இந்த பைக்கின் ஆரம்ப விலை ஆகும்.

அதே நேரத்தில் ஹால்சியான் பிளாக் கலர் ஆப்ஷனின் விலை 1.98 லட்ச ரூபாய் ஆகவும், ஜோத்பூர் ப்ளூ மற்றும் மெட்ராஸ் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்களின் விலை 2.02 லட்ச ரூபாய் ஆகவும், மெடாலியன் ப்ரோன்ஸ் கலர் ஆப்ஷனின் விலை 2.06 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
மறுபக்கம் கமாண்டே சேன்ட் கலர் ஆப்ஷனின் விலை 2.18 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் கன் க்ரே மற்றும் ஸ்டீல்த் பிளாக் கலர் ஆப்ஷன்களின் விலை 2.28 லட்ச ரூபாய் ஆக உள்ளது. இறுதியாக எமரால்டு கலர் ஆப்ஷனின் விலை 2.33 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. இதுதான் இந்த பைக்கின் டாப் மாடல் ஆகும்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் செயல்திறனை பொறுத்தவரையில், 350 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூயல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.20 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் நிரப்புவதற்காக அடிக்கடி நிறுத்தாமல், தொலை தூர பயணங்களை 'என்ஜாய்' செய்ய முடியும். அத்துடன் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ ஆக இருக்கிறது. எனவே பலதரப்பட்ட சாலைகளிலும், சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.
மேலும் இந்த பைக்கில் வழங்கப்படும் சிங்கிள் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி, நம்பிக்கையுடன் பயணம் செய்வதை உறுதி செய்கிறது. அத்துடன் ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற வசதிகளும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் வழங்கப்படுகின்றன. இது போன்ற காரணங்களால், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 கருதப்படுகிறது. இதுவே இந்த பைக்கின் வெற்றிக்கு காரணம் என நாங்கள் கருதுகிறோம். இது ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) போன்ற பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








