செஞ்சுட்டா போச்சு... ஹோண்டாவை பொளந்து கட்டும் ராயல் என்பீல்டு பைக்... விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 34,793 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 27,514 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Royal Enfield Classic 350

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 7,279 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், விற்பனையில் 26.46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும் கூட, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 46,573 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Royal Enfield Bullet 350

ஆனால் அதன் பின் வந்த நவம்பர் மாதத்தில், இந்த எண்ணிக்கை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 34,793 ஆக குறைந்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த நவம்பர் மாதத்தில், 11,780 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் பார்த்தால், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை 25.29 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1,81,118 ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 2,15,750 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. செயல்திறனை பொறுத்தவரையில், 349 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜினை, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 (Honda H'ness CB 350) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) போன்ற பைக்குகளுக்கும் கூட, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாகதான் திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 28, 2025, 19:00 [IST]
English summary
Royal enfield classic 350 sales report november 2025 26 46 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+