ராயல் என்பீல்டு கிளாசிக் 350 விலை இப்ப இவ்ளோதானா! வீட்டுக்கு வீடு ஒரு பைக்கை வாங்கி நிறுத்த போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). 350 சிசி செக்மெண்ட்டின் கிங் என வர்ணிக்கப்படும் இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 40,449 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 33,065 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 7,384 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Royal Enfield Classic 350

இதன் மூலம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், விற்பனையில் 22.33 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes September 2025), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், 8வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே, ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், பஜாஜ் பிளாட்டினா, டிவிஎஸ் அப்பாச்சி மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகிய பைக்குகள் உள்ளன. இந்த வரிசையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், 8வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

Royal Enfield Bullet 350

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1,81,118 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 2,15,750 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில், எல்இடி ஹெட்லைட், யூஎஸ்பி டைப் சி சார்ஜர், அட்ஜெஸ்ட் செய்ய கூடிய வகையிலான பிரேக் மற்றும் க்ளட்ச் மற்றும் ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற வசதிகள் (Features) எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையிலான 350 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூயல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ ஆகவும், எரிபொருள் டேங்க் கொள்ளளவு 13 லிட்டர்கள் ஆகவும் உள்ளது. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 350 சிசி செக்மெண்ட்டில் ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இது மிகச்சிறந்த ஆப்ஷன். ராயல் என்பீல்டு புல்லட் 350, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 ஆகிய பைக்குகளுக்கு மாற்றாகவும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 24, 2025, 23:55 [IST]
English summary
Royal enfield classic 350 sales report september 2025 22 33 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+