நாளைக்கு அறிமுகமாக இருக்கும் இந்த பைக்க ஆறுச்சாமி-னு செல்ல பெயர் வச்சு கூப்பிடலாம்.. 650சிசி அவதாரத்தில் வருது

இந்தியர்களின் பிரியமான பைக் மாடல்களில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). இந்த பைக்கே இந்தியர்களுக்காக 650 சிசி பைக் அவதாரம் எடுத்திருக்கின்றது. அதாவது, 650 சிசி பைக்காகவும் ராயல் என்பீல்டு கிளாசிக் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் அறிமுக நிகழ்வே நாளை அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் நிறுவனத்தின் ஆறாவது 650 சிசி பைக் மாடலாக மாறும்.

இதனாலேயே இந்த பைக்கிற்கு ஆறுச்சாமி என்கிற செல்ல பெயர் வரலாம் என்கிற எதிர்பார்ப்பு எழும்பி இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின்ழ் இன்டர்செப்டார் 650 (Interceptor 650), கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650), பியர் 650 (Bear 650), சூப்பர் மீட்டியர் (Super Meteor) மற்றும் ஷாட்கன் (Shotgun) ஆகிய ஐந்து பைக் மாடல்களே 650 சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Royal enfield classic 650 bike

இவற்றின் வரிசையிலேயே விரைவில் கிளாசிக் 650 இணைய உள்ளது. இந்த பைக்கை முதன் முதலில் 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மோட்டோவெர்ஸே நிகழ்ச்சியில் வைத்தே ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. அப்போதே இந்த பைக் இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களின் எதிர்பார்ப்பை கவர தொடங்கிவிட்டது.

இந்த மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தளிக்கும் விதமாகவே நாளை கிளாசிக் 650 பைக்கின் அறிமுகம் அரங்கேற உள்ளது. மற்ற 650 சிசி பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 648 சிசி பாரல்லல் ட்வின் எஞ்சினே இந்த பைக்கிலும் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.

Royal enfield classic 650 launch tomorrow

இந்த மோட்டார் அதிகபட்சமாக 46.3 பிஎச்பி மற்றும் 52.3 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சினில் எப்படி மற்ற 650 சிசி பைக்குகளைப் போலவே கிளாசிக் 650 இருக்குமோ, அதேபோல், உருவத்தில் கிளாசிக் 350ஐ பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த பைக் இருக்கும்.

அதேநேரத்தில் கூடுதல் கட்டுமஸ்தான தோற்றத்தைக் கொண்டதாக கிளாசிக் 650 இருக்கும். அத்துடன், கிளாசிக் 350-யைக் காட்டிலும் அதிக பிரீமியம் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கியதாகவும் அது இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், கம்ஃபோர்ட்டான டிராவல் அனுபவத்தை வழங்கும் வகையில் 43 மிமீ அளவுள்ள ஷோவா ஃபோர்க் முன் பக்கத்திலும், ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுதவிர, டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரிப்பர் நேவிகேஷன் மற்றும் அட்ஜெஸ்டபிள் லிவர்கள் என இன்னும் பல அம்சங்களை புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 650 பைக்கில் நாம் எதிர்பார்க்கலாம். எனவே இந்த பைக் சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் மிக சிறந்த பைக்காக இருக்கும்.

இதேபோல், பாதுகாப்பு அம்சங்களையும் அதிகமாக இந்த பைக் தாங்கி இருக்கும். அந்தவகையில், முன் மற்றும் பின் வீல்களில் டிஸ்க் பிரேக் உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்டவையே வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த பைக்கின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளைய தினம் இதன் விலை மற்றும் பிற முக்கிய சிறப்புகள் பற்றிய விபரங்களை ராயல் என்பீல்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் பைக் மாடல்களில் கிளாசிக் 650-யும் ஒன்றாகும். இந்த பைக் இந்தியாவில் நாளைய தினம் அறிமுகம் செய்யப்பட இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ரூ. 3.50 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே இந்த பைக் விற்பனைக்கு வரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 19:38 [IST]
English summary
Royal enfield classic 650 set to launch in india on tomorrow with vintage charm and modern features
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X