சென்னையில் இப்படிப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக் உருவாகுவது நமக்கு தான் கௌரவம்! அறிமுக தேதியை சொல்லுங்கப்பா...

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள மோட்டார்சைக்கிள்களுள் காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 (Continental GT-R 750) ஒன்றாகும். தற்சமயம் விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில்தான், அறிமுகத்திற்கு முன்னதாக காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 பைக் சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 650சிசி பைக்குகளை போலவே, 750சிசி என்ஜின் உடனும் புதியதாக பல்வேறு பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.

royal enfield continental gt-r 750 spotted

அந்த வகையில், முதலாவதாக வரவிருக்கும் பைக் தான், காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 ஆகும். இதற்கு முன்னரே சிலமுறை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு இருந்த இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக், தற்போதைய சோதனை ஓட்டத்திலும் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், முழுவதும் பேனல்கள் உடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி அறிமுகம் செய்ய உள்ள முதல் பைக், காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 ஆகும்.

இன்னும் இந்த பைக்கின் பெயரை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. அதாவது, அறிமுகத்தின்போது பைக்கிற்கு வேறொரு பெயர் சூட்டப்படலாம். ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நடத்திய ஜிடி கப் ரேசிங் சீரிஸ் பந்தயங்களில் காண்டினெண்டல் ஜிடி-ஆர் 650 பைக்குகள் பயன்படுத்தப்பட்டன. அதாவது, அந்த பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கி போட்டியாளர்களுக்கு வழங்கியது.

royal enfield continental gt-r 750 spotted

அதன் பெயரில் தான் புதிய 750சிசி பைக்கும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ள காண்டினெண்டல் ஜிடி-ஆர் 650 பைக் ஆனது இந்த பைக்கின் விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம் என அதன் தோற்றத்தை வைத்து எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில், காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் விலைமிக்க மிஸ்டர் க்ளீன் வேரியண்ட்டில் பைக்கின் பின்பக்கத்தில் க்ரோம் ஆல் சூழப்பட்ட பின்பக்க டெயில்லேம்ப் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறான டெயில்லைட்டை இந்த பைக்கில் காண முடியவில்லை. ஆனால், பைக்கின் என்ஜின் பகுதியிலும், எக்ஸாஸ்ட் குழாய் பகுதியிலும் க்ரோம் ட்ரீட்மெண்ட்டை காண முடிகிறது.

royal enfield continental gt-r 750 spotted

இதற்கு முன்னர் வெளியாகி இருந்த காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 பைக்கின் சோதனை ஓட்ட படங்களில் பைக்கின் மேற்கூறப்பட்ட பகுதிகள் கருப்பு நிறத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் வெளியாகி இருந்த படங்களிலும் சரி, இப்போது வெளியாகியுள்ள படங்களிலும் சரி பைக்கில் அலாய் சக்கரங்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்குகளில் அலாய் சக்கரங்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களை வழங்குவதா என்பது கடந்த சில வருடங்களாகவே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் விவாதத்திற்கு உள்ளானதாக உள்ளது. ஆனால், கடந்த சில பைக்குகளில் இந்த அம்சங்களை வழங்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முடிவெடுத்து இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், காண்டினெண்டல் ஜிடி-ஆர் 750 பைக்கும் மாடர்னான ராயல் என்ஃபீல்டு பைக்காக வர உள்ளது உறுதி.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2025, 10:54 [IST]
English summary
Royal enfield continental gt r 750 bike spotted again ahead of launch
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X