மொத்த இந்தியாவும் வெறிக்கொண்டு காத்திருக்கும் எலக்ட்ரிக் பைக்! ராயல் என்ஃபீல்டுக்கு என்னதான் ஆச்சு?

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் ராயல் என்ஃபீல்டு செயல்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் தோன்றி தற்போது சென்னையில் ஆதிக்கம் செலுத்திவரும் ராயல் என்ஃபீல்டு இன்னமும் எலக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) பிஸ்னஸில் இறங்கவில்லை. ஆனால், இந்த நிலை இன்னும் சில மாதக்களுக்கு மட்டுமே. ஏனெனில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.

royal enfield flying flea c6

முதல் எலக்ட்ரிக் பைக்காக 'ஃபிளையிங் ஃபிளே சி6' (Flying Flea C6) பைக்கை அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2024 EICMA கண்காட்சியின் போதே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும், அந்த கண்காட்சியில் ராயல் என்ஃபீல்டு தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை காட்சிக்கும் நிறுத்தி இருந்தது.

அடுத்த 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் ஒன்று சாலையில் காட்சித்தந்தது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை ஆகும். இந்த சோதனை ஓட்டத்தில் பைக் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு நிலையில் காட்சியளிக்கிறது.

royal enfield flying flea c6

இருப்பினும், பைக்கின் முன்பக்கத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதை மறைப்புகளை தாண்டி பார்க்க முடிகிறது. அலாய் சக்கரங்கள் இரண்டும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளன. இருக்கைகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. மற்றப்படி, ஃபிளையிங் ஃபிளே சி6 எலக்ட்ரிக் பைக்கில் என்ன மாதிரியான தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட உள்ளன என்பது இன்னமும் வெளியாகவில்லை.

ஏனெனில், ஃபிளையிங் ஃபிளே சி6 எலக்ட்ரிக் பைக்குகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் பணிகளை 2026ஆம் ஆண்டு துவங்கிய பின்னரே ஆரம்பிக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் பார்க்கும்போது, புதிய ஃபிளையிங் ஃபிளே சி6 ஆனது ரெட்ரோ மற்றும் மாடர்ன் என இரண்டும் கலந்த கலவையிலான எலக்ட்ரிக் பைக்காக உள்ளது.

royal enfield flying flea c6

1940ஆம் காலக்கட்டத்தில் பயன்பாட்டில் இருந்த பைக்குகளின் டிசைனையும் இந்த பைக்கில் பார்க்க முடிகிறது. குறிப்பாக, முன்பக்க சஸ்பென்ஷன் ஆனது பார்க்கவே வித்தியாசமாக உள்ளது. பைக்கின் பேட்டரி ஆனது மாங்கனீசு பெட்டகத்திற்குள் வழங்கப்பட உள்ளது. இந்த பைக்கில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வட்ட வடிவில் டிஜிட்டல் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை கொடுக்கப்பட்டுள்ளது.

சாவியில்லாமல், ஸ்மார்ட்போன் மூலமாக பைக்கை ஸ்டார்ட் செய்யும் வசதியை ராயல் என்ஃபீல்டு ஆய்வு செய்து வருகிறது. இந்த வசதியை புதிய ஃபிளையிங் ஃபிளே சி6 எலக்ட்ரிக் பைக்கில் எதிர்பார்க்கலாம். இதனுடன், மிகவும் உணர்வு திறன்மிக்க ஏபிஎஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றையும் ஃபிளையிங் ஃபிளே சி6 எலக்ட்ரிக் பைக்கில் எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளே சி6 எலக்ட்ரிக் பைக்கின் இந்த சோதனை தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. அநேகமாக சென்னையில் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலைக்கு அருகே நடத்தப்பட்டு இருக்கலாம். இந்த படங்களில் பைக் முழுவதுமாக தயாரானது போல் தெரியவில்லை. இன்னும் சிறு, சிறு வேலைகள் இருப்பது போலவே தெரிகிறது. ஆதலால், ஃபிளையிங் ஃபிளே சி6 அறிமுகமாகுவது 2026இல் தான் என்பது உறுதி.

Source: Gaadiwaadi

More from DriveSpark

Article Published On: Friday, April 25, 2025, 18:59 [IST]
English summary
Royal enfield flying flea c6 electric bike spied for first time
மேலும்... #royal enfield #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X