ராயல் என்ஃபீல்டு கம்பெனி எலக்ட்ரிக் பைக்கை எல்லாம் உருவாக்காதுனு யாருங்க சொன்னா? முதல் பந்தே சிக்ஸர் தான்...
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எலக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) விற்பனையில் இறங்க உள்ளது. முதல் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் ஆனது ஹிமாலயன் (Himalayan) அட்வென்ச்சர் பைக்கின் எலக்ட்ரிக் வெர்சனாக 'ஹிமாலயன் இவி' என்கிற பெயரில் களமிறக்கப்பட உள்ளது. அதேநேரம், 'ஃபிளையிங் ஃபிளே' (Flying Flea) என்கிற பெயரில் தனியாக ஒரு பிராண்டை அறிமுகம் செய்து அதன் வழியாகவும் எலக்ட்ரிக் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.
இந்த நிலையில், இந்த ஃபிளையிங் ஃபிளே பிராண்டில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ள இரு எலக்ட்ரிக் பைக்குகள் லடாக்கில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ளன. கொஞ்சம் இருங்கள்... லடாக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்கா? இதனை சமீபத்தில் எங்கேயோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? வேறு எங்கேயும் இல்லை, நம் டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில்தான் பார்த்திருந்தோம்.

ஜம்மூ & காஷ்மீர் பகுதியில் உள்ள லடாக்கில் தற்சமயம் அனைத்து புதிய ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக்குகளும் உள்ளன. ஏனெனில், சமீபத்தில்தான் ஹிமாலயன் இவி எலக்ட்ரிக் பைக்கை ராயல் என்ஃபீல்டு குழுவினர் லடாக் வரையில் சாலை வழியாக ஓட்டி கொண்டு சென்றதை பார்த்திருந்தோம். இந்த குழுவில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ பி கோவிந்தராஜன் அவர்களும் இடம்பெற்று இருந்தார்.
மேலும், இந்த லடாக் பயணத்தில் ஹிமாலயன் இவி எலக்ட்ரிக் பைக் மட்டுமின்றி, விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்காக விரைவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹிமாலயன் 750 பைக்கும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஹிமாலயன் 750 பைக்கை தான் பி கோவிந்தராஜன் ஓட்டினார். இந்த இரு புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகளை தொடர்ந்து, ஃபிளையிங் ஃபிளே சி6 மற்றும் எஸ்6 என்கிற இரு எலக்ட்ரிக் பைக்குகள் லடாக்கில் தற்போது சோதனை ஓட்டத்தின்போது காட்சி தந்துள்ளன.
ஹிமாலயன் இவி எலக்ட்ரிக் பைக்கிற்கும், இந்த ஃபிளையிங் ஃபிளே எலக்ட்ரிக் பைக்குகளுக்கும் தோற்றத்திலும் சரி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி நிறைய வேறுப்பாடுகள் உள்ளன. இதனால்தான், தற்போது லடாக்கில் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கில் ஃபிளையிங் ஃபிளே என்கிற தனி பிராண்டில் களமிறக்கப்பட உள்ளன.
மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இருந்து மட்டுமின்றி, தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஒட்டுமொத்த எலக்ட்ரிக் பைக்குகளில் இருந்தும் ஃபிளையிங் ஃபிளே சி6 மற்றும் எஸ்6 எலக்ட்ரிக் பைக்குகள் முற்றிலும் வேறுப்பட்டவை ஆக உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளும் ஒரே மாதிரியான எல் ஃபிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை ஆகும்.
ஃபிளையிங் ஃபிளே சி6 எலக்ட்ரிக் பைக் இதற்கு முன்னர் ஏற்கனவே ஒருமுறை இதுபோன்று சோதனை ஓட்டத்தின்போது சாலையில் காட்சி தந்து இருந்தது. ஆனால், ஃபிளையிங் ஃபிளே எஸ்6 எலக்ட்ரிக் பைக் இப்போதுதான் முதல்முறையாக சாலைக்கு வந்துள்ளது. சி6 ஆனது நியோ-ரெட்ரோ (Neo-Retro) ஸ்டைல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். அதுவே, எஸ்6 ஆனது ஸ்க்ராம்ப்ளர் ரக எலக்ட்ரிக் பைக் ஆகும்.
ஸ்க்ராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள் என்பதை வெளிக்காட்டும் விதமாக ஃபிளையிங் ஃபிளே எஸ்6 எலக்ட்ரிக் பைக்கில் வித்தியாசமான டிசைனிலான ஹேண்டில்பார், ஆஃப்-செட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் உயரத்தில் பொருத்தப்பட்ட முன்பக்க ஃபெண்டரை காணலாம். மேலும், சி6 மற்றும் எஸ்6 இரண்டும் எலக்ட்ரிக் பைக் என்பதால் இவை இரண்டிலும் சைலன்சர் இல்லாததையும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள படங்களில் காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இரண்டையும் ஒன்றாக கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. அதன்பின், தற்போதுதான் இவை இரண்டும் ஒன்றாக காட்சி தந்துள்ளன. இருப்பினும், இந்த இரண்டில் எது ஃபிளையிங் ஃபிளே சி6 மற்றும் எஸ்6 என்பதையே கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு இரண்டும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











