இன்னும் 6 நாள் தான் இந்த 6 ராயல் என்ஃபீல்டு பைக்கின் விலை மட்டும் உயருது! எவ்வளவு தெரியுமா?

வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் அமலுக்கு வரவுள்ளதால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 6 பைக்குகளின் விலை ரூ30 ஆயிரம் வரை அதிகமாகப்போகிறது. இதனால் பலர் தற்போதே இந்த பைக்கை வாங்கி வருகிறனர். இன்னும் 6 நாள் தான் இருக்கும் நிலையில் எந்தெந்த பைக்குகள் எவ்வளவு விலை உயரப்போகிறது என்ற விபரம் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜிஎஸ்டி வரி மாற்றத்தில் 350 சிசிக்கு அதிகமாக இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கு இனி 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த பைக்குகளுக்கு எல்லாம் தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது போக செஸ் வரி வேறு இருக்கிறது. இனி இந்த ரக பைக்ககளுக்கு எல்லாம் 40 சதவீதம் வரி என்ற நிலையில் ராயல்என்ஃபீல்டு நிறுவனம் 6 பைக்குகள் 350 சிசிக்கு அதிக இன்ஜின் திறன் கொண்ட பைக்குளாக உள்ளன. இதன்பட இன்டர்செப்டர் 650, காண்டினென்டல் ஜிடி 650, சூப்பர் மீட்டியோர் 650, ஷாட்கன் 650,கிளாசிக் 650, பியர் 650 ஆகிய பைக்குகள் உள்ளன.

Royal Enfield GST Price Hike

இன்டர்செப்டர் 650

இன்டர்செப்டர் 650 பைக்கை பொருத்தவரை மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் விற்பவனையாகி வருகிறது. தற்போது ரூ3.09 லட்சம் முதல் ரூ3.38 லட்சம் வரையிலான விலையில் விற்பவனையாகி வருகிறது. இந்த பைக் இனி ரூ3.32 லட்சம் முதல் ரூ3.62 லட்சம் வரையில விலை உயருகிறது. இதனால் ரூ22.5 ஆயிரம் முதல் ரூ24.6 ஆயிரம் வரை விலை உயர்வு வரப்போகிறது.

Number Variants old price new price Difference Hike %
1 Cali Green 3,09,551 3,32,073 22,522 7.28
2 Canyon Red 3,09,551 3,32,073 22,522 7.28
3 Sunset Strip 3,17,728 3,40,845 23,117 7.28
4 Barcelona Blue 3,27,943 3,51,804 23,861 7.28
5 Black Ray 3,27,943 3,51,804 23,861 7.28
6 Mark 2 3,38,158 3,62,762 24,604 7.28
Royal Enfield GST Price Hike

காண்டினென்டல் ஜிடி 650

காண்டினென்டல் ஜிடி 650 பைக்கை பொருத்தவரை மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வரகிறது.இந்த பைக் ரூ3.25 லட்சம் முதல் ரூ3.78 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் இனி ரூ3.49 லட்சம் முதல் ரூ3.78 லட்சம் வரை உயரப்போகிறது. இந்த பைக் ரூ23.7 ஆயிரம் முதல் ரூ25.6 ஆயிரம் வரை உயரப்போகிறது.

Number Variants old price new price Difference Hike %
1 British Racing Green 3,25,897 3,49,609 23,712 7.28
2 Rocker Red 3,25,897 3,49,609 23,712 7.28
3 Apex Grey 3,46,330 3,71,529 25,199 7.28
4 Slip Stream Blue 3,46,330 3,71,529 25,199 7.28
5 Mr Clean 3,52,459 3,78,104 25,645 7.28
Royal Enfield GST Price Hike

கிளாசிக் 650

கிளாசிக் 650 பைக்கை பொருத்தவரை 4 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. தற்போது இந்த பைக் ரூ 3.36 லட்சம் முதல் ரூ3.49 லட்சம் வரை விற்பனவையாகி வருகிறது. இனி இந்த பைக் ரூ3.61 லட்சம் முதல் ரூ3.75 லட்சம் வரை உயருகிறது. இதனால் மொத்தம் ரூ24.6 ஆயிரம் முதல் ரூ25.6 ஆயிரம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Number Variants old price new price Difference Hike %
1 Vallam Red 3,36,610 3,61,243 24,633 7.32
2 Bruntingthorpe Blue 3,36,610 3,61,243 24,633 7.32
3 Teal 3,41,037 3,65,995 24,958 7.32
4 Black Chrome 3,49,890 3,75,497 25,607 7.32

ஷாட்கன் 650

ஷாட்கன் 650 பைக்கை பொருத்தவரை மொத்தம் 3 விதமான வேரியன்ட்களி் விற்பனையாகி வருகிறது. தற்போது ரூ3.78 லட்சம் முதல் ரூ3.81 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த பைக் இனி ரூ4.05 லட்சம் முதல் ரூ4.08 லட்சம் வரை விற்பனவையாகிறது. சராசரியாக ஒவ்வொரு வேரியன்டிற்கும் ரூ27 ஆயிரம் விலை அதிகமாகிறது.

Number Variants old price new price Difference Hike %
1 Plasma Blue 3,78,140 4,05,814 27,674 7.32
2 Drill Green 3,78,140 4,05,814 27,674 7.32
3 Stencil White 3,81,064 4,08,953 27,889 7.32
Royal Enfield GST Price Hike

சூப்பர் மீட்டியோர் 650

சூப்பர் மீட்டியோ 650 பைக்கை பொருத்தவரை மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் தற்போது ரூ3.71 லட்சம் முதல் ரூ4.02 லட்சம் வரை விற்பனவையாகி வருகிறது. இனி இந்த பைக் ரூ3.98 லட்சம் முதல் ரூ4.32 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும். இது ரூ27.2 ஆயிரம் முதல் ரூ29.4 ஆயிரம் வரை விலை உயருகிறது.

Number Variants old price new price Difference Hike %
1 Astral Green 3,71,767 3,98,975 27,208 7.32
2 Astral Black 3,71,767 3,98,975 27,208 7.32
3 Interstellar Grey 3,87,320 4,15,667 28,347 7.32
4 Interstellar Green 3,87,320 4,15,667 28,347 7.32
5 Celestial Blue 4,02,876 4,32,362 29,486 7.32

பியர் 650

பியர் 650 பைக்கை பொருத்தவரை மொதா்தம் 5 விதமான வேரியன்ட்களில் விற்பவனையாகி வருகிறது. தற்போது ரூ3.46 லட்சம் முதல் ரூ3.66 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வரகிறது. இந்த பைக் இனி ரூ3.71 லட்சம் முதல் ரூ3.93 லட்சம் என்ற விலையில் விற்பவனைக்கு வரும். இது ரூ25.3 ஆயிரம் முதல் ரூ26.8 ஆயிரம் வரை விலை உயருகிறது.

Number Variants old price new price Difference Hike %
1 Board Walk 3,46,330 3,71,675 25,345 7.32
2 Wild Honey 3,51,441 3,77,161 25,720 7.32
3 Petrol Green 3,51,441 3,77,161 25,720 7.32
4 Golden Shadow 3,58,591 3,84,834 26,243 7.32
5 Two Four Nine 3,66,760 3,93,601 26,841 7.32

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றத்தலால் பெரும்பாலான வாகனங்களின் விலை குறையும் நிலையில் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் வாகன விரும்பிகள் பலர் விலை உயர்வதற்கு முன்னர் இந்த வாகனங்களை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். இதில் உங்களுக்கு பிடித்த வாகனத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 16, 2025, 17:10 [IST]
English summary
Royal enfield gst price hike 650cc models up by 30000
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X