விலை இவ்வளவு கம்மியா? ராயல் என்ஃபீல்டு கிட்ட இப்படி ஒரு வண்டிய யாருமே எதிர்பார்கல!

ராயல் என்ஃபீல்ஐ நிறுவனம் தனது கொரில்லா 450 பைக்கில் புதிய கலர் ஆப்னை அறிமுகப்படுத்தியள்ளது. இந்த பைக் ரூ2.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஜிஆர்ஆர்ஆர் எக்ஸ் என்ற நிகழ்ச்சியில் புனேவில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அந்நிறுவனம் தனது கொரில்லா 450 பைக்கின் புதிய கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஷாடோ ஆஷ் நிறத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ரூ2.49 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஆலிவ் கிரீன் நிறத்திலே டேங்க் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு நிற டீட்டெயிலிங் வழங்கப்பட்டுள்ளது.

Royal Enfield Guerrilla 450 Shadow Ash

கொரில்லா 450 பைக்கை பொருத்தவரை செர்ப்பா 450 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 452 சிசியில் சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜினாக உரவாக்கப்பட்டுள்ளது. இது 8000 ஆர்பிஎம்மில் 39.52 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் திறனையும் வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் இன்ஜின் ஹார்டான ரைடை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஓட்டும் போது கொஞ்சம் வைப்ரேஷன் வந்தாலும் இது பைக்கின் ஒரு திறனாகவே இருக்கிறது. இதன் கியர் பாக்ஸ் ஸ்மூத்தாகவும், கிளட்ச் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் வழங்கப்பட்டுள்ளது.

Royal Enfield Guerrilla 450 Shadow Ash

இந்த பைக்கில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் மேப் வழங்கப்பட்டுள்ளது. இதில் லேயர் வேரியன்டில் அனலாக் வேரியன்டில் கிளஸ்டர் டிஜிட்டல் டிஸ்பிளே, டிரைப்பர் பாட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதே அமைப்பு தான் ஷாட்கன் 650, சூப்பர் மீட்டியோர் 650 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதனால் வாகனத்தின் யூஎஸ்பி போர்ட்கள், ஹசார்டு லைட்டுகள், ராயல் என்ஃபீல்டு பைக்கில் 2 விதமான ரைடிங் மோடுகள், ரைடு பை வயர் டெக்னாலஜி உள்ளிட்ட எல்இடி லைட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்த பைக் டியூப்லர் ஃபிரேம்மில் வழங்கப்ப்டடுள்ளது. இந்த பைக்கில் முன்பக்கம் 43 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்குகளை பொருத்தவரை இந்த பைக்கில் முன்பக்கம் 310 மிமீ அளவிலும், பின்பக்கம் 270 மிமீ அளவிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வீலில் 120/70 மறுஅறம் 160/60 என்ற அளவுகளில் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஜிஆர்ஆர்ஆர் நைட்ஸ் எக்ஸ் நிகழ்ச்சியில் டிராக் ரேஸ், டிரிஃப்ட் ஷோ, மியூசிக் பெர்ஃபார்மென்ஸ், உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. இதில் சுமார் 3000 பேர் பங்கேற்றனர். மேலும் இதில் ரைடிங் கிளினிக்ஸ், புதிய முயற்சி செய்பவர்களுக்கு டிரைஅவுட் நிகழ்ச்சி ஸ்டண்ட் ரைடர்களின் நிகழ்ச்சி உள்ளிட்ட ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் ஒரு தயாரிப்பில் புதிய கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிச்சயம் பெரிய அளவில் விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் இது மக்களின் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்லாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 24, 2025, 19:00 [IST]
English summary
Royal enfield guerrilla 450 shadow ash launched at rs 2 49 lakh
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+