52 ஆயிரம் ரூபா தண்ட செலவு இல்ல! ராயல் என்ஃபீல்டு பைக்கை 26,000கிமீ தொலைவு ஓட்டியவர் செய்த மாற்றங்கள்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் சமீப காலத்தில் அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த பைக்குகளுள் ஹிமாலயன் 450 (Himalayan 450) ஒன்றாகும். முன்பு விற்பனையில் இருந்த ஹிமாலயன் 411 பைக்கின் அடுத்த தலைமுறை வெர்சனாக ஹிமாலயன் 450 அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தற்சமயம் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகளுள் ஹிமாலயன் 450 ஒன்றாகும்.

எந்தவொரு கரடுமுரடான பாதைகளுக்கும் கொண்டு செல்லக் கூடியதாக இருப்பதினாலேயே தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வோர் பலரது மோட்டார்சைக்கிளாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் உள்ளது. அந்த வகையில், இங்கு ஒருவர் கடந்த 19 மாதங்களில் மட்டும் சுமார் 26 ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ தொலைவிற்கு தனது ஹிமாலயன் 450 பைக்கில் பயணம் செய்துள்ளார்.

royal enfield himalayan 450 owner

அதாவது, சராசரியாக ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 1,400கிமீ. மாதத்திற்கு 1,400கிமீ என்பது மிகவும் அதிகம் கிடையாதே என்றாலும், இவர் தனது ஹிமாலயன் பைக்கிற்கு கொடுத்துள்ள புதிய பெட்ரோல் டேங்க் (Petrol Tank) தான் நம்மை வசீகரிக்கிறது. பைக்கின் ஒட்டுமொத்த பெட்ரோல் டேங்க் அமைப்பும் மாற்றப்பட்டு உள்ளது.

இதனால், பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 17 லிட்டர்களில் இருந்து 23 லிட்டர்களாக அதிகரித்துள்ளது. இதற்கு மட்டும் இந்த நபர் செலவு செய்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா சுமார் ரூ.52,000. இந்த மாடிஃபை (Modify) செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் தொடர்பான விபரங்கள் 'பிக் பியர் கஸ்டம்ஸ்' (Big Bear Customs) என்கிற யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

royal enfield himalayan 450 owner

இந்த யூடியூப் சேனலை நடத்துபவரின் சப்ஸ்கிரைபர் (Subscriber) ஒருவருக்கு சொந்தமானதாக இந்த ஹிமாலயன் 450 பைக் உள்ளது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு இருப்பினும், ஆச்சிரியப்படுத்தும் விதமாக பைக்கின் எடை 2இல் இருந்து 3 கிலோ வரையில் குறைந்துள்ளது. இது நேரடியாக பைக்கின் பெர்ஃபார்மன்ஸை மேம்படுத்தி உள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலமாக, இந்த பைக்கை தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டு செல்வது எளிமையாகி உள்ளதாக கூறும் இவர்கள், பைக்கிற்கு புதியதாக வழங்கியுள்ள பெட்ரோல் டேங்க் ஆனது ஏசர்பிஸ் (Acerbis) என்கிற நிறுவனம் உருவாக்கியது ஆகும். பெட்ரோல் டேங்க் மட்டுமின்றி, பைக்கில் இன்னும் வேறு சில மாடிஃபிகேஷன்களும் (Modifications) கொண்டுவரப்பட்டு உள்ளன.

குறிப்பாக, பெட்ரோல் டேங்கின் டிசைனுக்கு ஏற்ப குறுகிய டிசைனிலான இருக்கை அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், பைக்கின் எக்ஸாஸ்ட் (Exhaust) குழாய் அமைப்பும் மாற்றப்பட்டு உள்ளது. இதனால், பைக்கின் உறுமும் சத்தமும் மாறியுள்ளது. இவற்றை புதியதாக பொருத்தியுள்ள இந்த ஹிமாலயன் பைக்கின் உரிமையாளர், அதேநேரம் பைக்கின் பின்பக்கத்தில் ராக் பகுதியையும், என்ஜினுக்கு முன்னால் பாதுகாப்புக்காக ராயல் என்ஃபீல்டு வழங்கிய கிரில்லையும் நீக்கி உள்ளார்.

பைக்கின் எடை 3 கிலோ வரையில் குறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். என்ஜின் பகுதியில் ஃப்யுல் எக்ஸ் புரோ பிளஸ் (FuelX Pro Plus) மற்றும் பிஎம்சி காற்று சுத்திகரிப்பான் (BMC Air Filter) உள்ளிட்ட தொழிற்நுட்ப கருவிகளை புதியதாக சேர்த்துள்ளனர். அதேநேரம், என்ஜின் சிஸ்டத்தில் ஏர்பாக்ஸில் பிராப் (Brap) வால்வை நீக்கி உள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹிமாலயன் 450 பைக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்கும் பெட்ரோல் டேங்க் டிசைனே சூப்பராக இருக்கும். இவர்கள் வழங்கியிருப்பது அதனை காட்டிலும் அருமையாக உள்ளது. பைக்கின் டிசைன் மட்டுமின்றி, என்ஜின் சிஸ்டத்திலும் கை வைத்துள்ளனர் என்பதால், இது மோட்டார்சைக்கிளின் இன்ஸ்சூரன்ஸில் நிச்சயமாக பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். முடிந்தவரையில் இவ்வாறான பைக் மாடிஃபிகேஷன்களை நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் கொடுத்து மேற்கொள்வது நல்லது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2025, 15:17 [IST]
English summary
Royal enfield himalayan 450 bike owner fixed aftermarket 23 litter petrol tank
மேலும்... #bike modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+