காசு பத்திலாம் யோசிக்காதீங்க! உடனே இந்த வண்டிய வாங்கி போடுங்க ஊரே உங்கள கெத்தா பார்க்கும்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மானா பிளாக் எடிசன் பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த பைக் ரூ3.37 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக வந்துளு்ளது.இந்த மானா என்பது இந்தியா- சீனா பார்டரில் கடல் மடத்தில் இருந்து 5600 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள ஒரு பகுதியாகும் அதை பெருமைபடுத்தும் வகையில் இந்த பிளாக் எடிசனை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் பைக்கில் மானா பிளாக் என்ற எடிசனை வெளியிட்டுள்ளுது. இந்த பைக் ஆஃப்ரோடு அம்சங்களை கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் தாக்குபடிக்கும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. மானா பாஸ் பகுதியை பெருமைபடுத்தும் வகையில் இந்த எடிசன் வெளியிடப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan Mana Black Edition

இந்த பைக் டார்க் தீமில் உருவசாக்கப்ப்டடுள்ளது. இ்நத பைக்கின் பாடி பேனல் முழுவதும் பிளாக் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. பாடி பேனல் பகுதியில் விஷூவலாக சில விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளுது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் காஸ்மெட்டிக் மாற்றம் மட்டும் அல்லாமல் ஃபேக்டரியிலேயே சில அட்வெஞ்சர் ஆக்சஸரீஸ்கள் பொருத்தப்பட்ட வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை ஷோரூமிலிருந்து வாங்கும் போதே ஆஃப்ரோடு ரெடி பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த பைக்கில் தனது செர்ப்பா 450 இன்ஜினை பொருத்தியுள்ளது. இது 451.965 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்ப்டடுள்ளது. இது39.5 பிஎஸ் பவரையும் 40 என்எம் டார்க் திறனையமு் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. இந்த பைக்கில் எலெக்ட்ரானிக் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் வழங்கப்பட்டுள்ளுது. இது ரைடு பை வயர் தொழிற்நுட்பத்தில் இயங்ககிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அம்சத்துடன் இருக்கிறது.

Royal Enfield Himalayan Mana Black Edition

இந்த பைக்கின் ட்யூனிங் மிட் ரேஞ்ச் பெர்ஃபார்மென்ஸை வெளிபடுத்தும் வகையில் டியூன் செய்யப்ப்டடுள்ளுது. இது மலை பகுதிகளிலும் கரடு முரடான பாதைகளிலும் ஆஃப்ரோடு பயணிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தபைக்கில் ஸ்டீல் ட்வின் ஸ்பார் டியூப்லர் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இது நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றவாறு செட்டப் செய்யப்பட்டுள்ளுது. இந்த பைக்கின் முன்பக்கம் 43 மிமீ தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க் உள்ளது. இது 200 மிமீஅளவில்வ ழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் லிக்கேஜ் டைப் மோனோ ஷாக் சன்பென்சன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 230 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. மேலும் இதன் வீல் பேஸ் 1510 மிமீ அளவிலும், சீட் உயரம் 860 மிமீ அளவிலும் இருக்கிறது. இது ஸ்டாண்டர்டு மாடல் அளவுகள்தான். இந்த பைக்கில் முக்கியமான ஹார்டுவேர் அம்சம் என்றால் பிளாக் ரேலி ஹேண்ட் கார்டு வழங்கப்பட்டிருப்பது தான். இது போக டுயல் ரேலி சீட்கள், உயரமான ரேலி மட்கார்டு, வயர் ஸ்போக் ட்யூப்லெஸ் டயர்கள் இதில் ழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் 320 மிமீ, பின்பக்கம் 270 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. மேலும் இதில் ஸ்விட்சபிள் டுயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்ப்டடள்ளுது. டயர்கள் முன்பக்கம் 21 இன்ச் அளவிலும் பின்பக்கம் 17 இன்ச் அளவிலும் வழங்கப்ப்டடுள்ளது.

இந்த பைக்கில் உள்ள தொழிற்நுட்பத்தை பொருத்தவரை 4 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே, பில்டு இன் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், ரைடு மோடுகள், மீடியா கண்ட்ரோல், டைம் சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், எல்இடி லைட்டிங், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த பைக்கின் வருகை நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2025, 13:55 [IST]
English summary
Royal enfield himalayan mana black edition launched know full details
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+