இத்தாலியில் ராயல் என்ஃபீல்டு செய்த தரமான சம்பவம்! இந்திய பெயரில் பைக் வெளியானது!

இத்தாலியின் நடந்து வரும் EICMA டூவீலர் வாகன கண்காட்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல்வேறு வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ளது. அதில் தனது ஹிமாலயன் 450 பைக்கின் மானா பிளாக் எடிசன் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இத்தாலியின் ஒவ்வொரு ஆண்டு டூவீலர்களுக்கான பிரத்தியேகமாக EICMA என்ற கண்காட்சி நடைபெறும். இதில் உலகின் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்தும். புதிய தயாரிப்புகள், தொழிற்நுட்பங்கள், புதிய அப்டேட்கள் எல்லாம் இந்த கண்காட்சியில் வெளியாகும் அதன்படிராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாகனங்களை இந்த கண்காட்சியில் காட்சிபடுத்தியுள்ளது.

Royal Enfield Himalayan Mana Black

இதன்படி இந்நிறுவனம் தனது ஹிமாலயன் 450 பைக்கின் மானா பிளாக் எடிசனை வெளியட்டுள்ளது. இந்த பைக் பார்க் மற்ற ஹிமாலயன் 450 பைக்கிலிருந்து மாற்றம் உண்டாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் முழுமையாக கருப்பு நிற தீமில் ரேலி ஸ்டைல் ஆக்ஸசரீஸ்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பெரும்பான பகுதிகள், பானி பேனல்கள் எல்லாம் கருப்பு நிறத்தி்ல வழங்கப்பட்டுள்ளது. ஃப்யூயல் டேங்க் பகுதியில் சில கிரே நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கின் லுக்கை மாற்றியமைக்கும் வகையில் உள்ளது. இது போக சற்று உயரமான சீட்டுகள், பேக் ஸ்டைல் ஃபென்டர்கள், பிளாட் பெஞ்ச் சீட்டுகள், நக்கில் கார்டுகள், ரேலி ஸ்டைல் பின்பக்க பேனல்கள், வழங்கப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan Mana Black

இந்த பைக்கில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 452 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 40 பிஎச்பி பவரையும், 40 என்எம் டார்க் திறனையம் வெளியப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் தொழிற்நுட்பத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கலர் டிஎஃப்டி ஸ்கிரீன் உள்ளது.இதில் கூகுள் மேப்ஸ், ப்ளூரடூத் கனெக்டிவிட்டி, ஸ்விட்ச்சபிள் ஏபிஎஸ், ரைடு பை வயர் திராட்டல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த பைக்கின் மொத்த எடை 196 கிலோ ஆகும். இதில் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 230 மிமீ உயரம் உள்ளது. அதே போல வீல் பேஸை பொருத்தவரை 1510 மிமீ நீளம் உள்ளது. இந்த பைக்கின் முன்பக்கம் 21 இன்ச் அளவிலும், பின்பக்கம் 17 இன்ச் அளவிலும் ஸ்போக் வீல்கள் உள்ளன. இ்நத பைக்கில் ஷோவா யூஎஸ்டி ஃபோர்க் முன்பக்க சஸ்பென்ஸனாகவும், பின் பக்கம் மேனோஷாக் சஸ்பென்சன் சிஸ்டமும் வழங்கப்ப்டடுள்ளுது. இரண்டு வீல்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது.

இந்த பைக் இந்தியாவை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மானா பிளாக் எடிசன் என்பது இந்தியாவில் உள்ள மானா பாஸ் என்ற பகுதியின் பெயராக இருக்கிறது. இந்த பகுதி இந்திய சீன எல்லையாக வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே உயரமான வாகனங்களில் பயணிக்கூடிய வழியாக இருக்கிறது.இதனால் இது பைக் ரைடர்களுக்கு பிரபலம் ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த பைக் தான் அதில் எளிதாக பயணிக்க முடியும். இதனால் இந்த பெயரை இந்த பைக்கின் எடிசனிற்கு அந்நிறுவனம் வைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆஃப்ரோடு விரும்பிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பலர் இமயமலை பகுதிகளில் பயணிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். இதை மனதில் வைத்து தனது ஆஃப்ரோடு பைக்கின் புதிய எடிசனை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தஎடிசன் விற்பனைக்கு வரும்போது நிச்சயம் இதன் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 16:15 [IST]
English summary
Royal enfield himalayan mana black edition unveiled
மேலும்... #royal enfield
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+