விற்பனைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் 5 லட்சம் யூனிட் விற்பனையாகி சாதனை.. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட பைக்..

இந்தியா இரண்டு சக்கர வாகனங்களுக்கான மிகப் பெரிய மார்க்கெட் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை மறந்திருக்கும் இந்தியர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்ற விதமான ஓர் நிகழ்வே தற்போது நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. இரண்டு சக்கர வாகன மாடல் ஒன்று விற்பனைக்கு வந்த இரண்டரை ஆண்டுகளிலேயே 5 லட்சம் யூனிட்டுகள் விற்பனை எனும் மாபெரும் சாதனை மைல் கல்லை எட்டி இருக்கின்றது. அது வேறு ஒன்றும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக மாறியிருக்கும் ஹண்டர் 350 (Hunter 350) மோட்டார்சைக்கிள்தான்.

இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே நாட்டில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த பைக்கை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆகையால், தொடக்கத்திலேயே இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

Royal enfield hunter 350 side design

இதுவே இப்போதும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது 5 லட்சம் யூனிட்டுகள் விற்பனை எனும் சாதனையை எட்டியிருக்கின்றது. ஹீரோ (Hero) மற்றும் ஹோண்டா (Honda) நிறுவனங்களின் தயாரிப்பு அல்லாத ஓர் மோட்டார்சைக்கிள் குறுகிய கால இடைவெளியில் இந்த அளவு மாபெரும் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து இருப்பது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

மிக முக்கியமாக சென்னையை தாயகமாகக் கொண்டு நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இப்படி ஒரு டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது தமிழகத்திற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை குறைவான பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். ரூ. 1.50 லட்சம் தொடங்கி ரூ. 1.75 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Hunter 350 surpasses 5 lakh sales milestone

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கை தன்னுடைய புகழ்பெற்ற ஜே-சீரிஸ் ஆர்கிடெக்சர் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரித்திருக்கின்றது. தொடர்ந்து எஞ்சினைப் பொருத்த வரை 349 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்டட், எஸ்ஓஎச்சி எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றனர்.

இது அதிகபட்சமாக 20.2 குதிரை திறனையும், 27 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பைக்கை மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். ரெட்ரோ (Retro), மெட்ரோ (Metro) மற்றும் மெர்டோ ரிபெல் (Metro Rebel) ஆகியவையே அவை ஆகும்.

தொடர்ந்து, நிற தேர்வைப் பொருத்த வரை இந்த பைக்கில் பிளாக், சில்வர், டேப்பர் ஒயிட், டேப்பர் ஆஷ், டேப்பர் கிரே, ரிபெல் பிளாக், ரிபெல் ப்ளூ, ரிபெல் ரெட் ஆகியவையே வழங்கப்படுகின்றன. 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க், ட்வின் கேஸ் சார்ஜ்ட் ஷாக் அப்சார்பர் உள்ளிட்டவை இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்திற்காக வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, சிறப்பான பிரக்கிங் அனுபவத்திற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 300 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 270 மிமீ டிஸ்க் பிரேக்குகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், மிதக்கின்ற மாதிரியான ஸ்டைலில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், ஸ்பிளிட் கிராப் ரெயில்கள், வட்ட வடிவ எல்இடி டெயில் லேம்ப், கருப்பு நிறத்தினாலான அலாய் வீல்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தது போன்ற சிறப்பு வசதிகளின் காரணத்தினாலேயே இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இன்னும் பல சாதனைகளை விற்பனை விஷயத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2025, 14:48 [IST]
English summary
Royal enfield hunter 350 reaches over 5 lakh sales in under 2 5 years
மேலும்... #royal enfield #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+