கூலி வேலைக்கு போறவங்க கூட இந்த ராயல் என்பீல்டு பைக்கை வாங்கலாம்! அந்த அளவுக்கு கம்மி ரேட்ல வித்து தள்றாங்க!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்கை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவு இல்லாதவர்களை காண்பது அரிது. ஆனால் நிறைய பேரால் இந்த கனவை நிறைவேற்ற முடியாமல் போவதற்கு, விலை மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் பிரீமியமானவை என்பதால், விலை சற்று அதிகம்.

எனினும் குறைவான விலையில் ஒரு ராயல் என்பீல்டு பைக்கை சொந்தமாக்க விரும்பினால், அதற்கும் வழி இருக்கவே செய்கிறது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக்கை பற்றிதான் நாங்கள் தற்போது பேசி கொண்டுள்ளோம். இது மிகவும் விலை குறைவானது என்பதால், ஒவ்வொரு மாதமும் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.

2025 Royal Enfield Hunter 350 Side View

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18,109 ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 16,186 ஆக மட்டுமே இருந்தது. இது 11.88 சதவீத வளர்ச்சி ஆகும்.

Royal Enfield Hunter 350

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes), ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் 10வது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் மிகவும் விலை குறைவானது என்பதுதான் இதற்கான முக்கியமான காரணம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் (Most Affordable Royal Enfield Bike) எது என கேட்டால், ஹண்டர் 350 என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். இதன் ஆரம்ப விலை வெறும் 1,49,900 ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 1,81,750 ரூபாயாக இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். டோக்கியோ பிளாக், லண்டன் ரெட், ரியோ ஒயிட், ரீபெல் ப்ளூ, டேப்பர் க்ரே மற்றும் ஃபேக்டரி பிளாக் என மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) இந்த பைக் கிடைக்கிறது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், 349 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச்சும் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை ஏற்கனவே சிறப்பாகதான் இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம். கடந்த ஏப்ரல் மாத இறுதியில்தான், 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு வந்தது. எனவே வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு ஹண்டர் 350 நல்ல ஆப்ஷன். ஹோண்டா சிபி350ஆர்எஸ் (Honda CB350RS) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2025, 17:04 [IST]
English summary
Royal enfield hunter 350 sales report april 2025 12 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+