அடி மாட்டு விலையில் விற்கப்படும் ராயல் என்பீல்டு பைக்! இத விட கம்மி ரேட்ல வேற எந்த பைக்கும் இல்ல!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). இதன் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 16,599 ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 12,122 ஆக மட்டுமே இருந்தது.
இதன் மூலம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் 36.93 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.75 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதிலேயே மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் (Most affordable Royal Enfield Bike) என்ற பெருமையை ஹண்டர் 350 தன்வசம் வைத்துள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், 350 சிசி ஃப்யூயல் இன்ஜெக்டட் லாங் ஸ்ட்ரோக் J இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.40 பிஎஸ் பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஃபேக்டரி பிளாக், டேப்பர் ஆரஞ்ச், டேப்பர் க்ரீன், டேப்பர் க்ரே, டேப்பர் ஒயிட், ரீபல் பிளாக், ரீபல் ப்ளூ மற்றும் ரீபல் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் (Colour Options) ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக் இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவை போலவே, சர்வதேச சந்தைகளிலும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக 5 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக், கடந்த ஜனவரி மாதம் எட்டியது. இது கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பைக் ஆகும். அதாவது இரண்டரை வருடங்களுக்கு உள்ளாகவே 5 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 கடந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்கை வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் விலை அதிகம் என்பதால், இந்த கனவை பலராலும் நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதமாக இருப்பதுதான் ராயல் என்பீல்டு ஹண்டர் 350.
ஏனெனில் இதுதான் இருப்பதிலேயே மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் ஆகும். எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒரு பைக்கையாவது சொந்தமாக வாங்கி விட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களுக்கு ஹண்டர் 350 நல்ல ஆப்ஷன் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








